Posts

Showing posts from April, 2021

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

Image
நெருப்பாற்றில் நீந்தும் இயக்கம் திமுக என்பதற்கு திமுக கடந்து வந்த பாதை முழு விபரங்கள் காங்கிரஸை 1962 லேயே தோற்கடித்திருக்கலாம் என்பதே எதார்த்தமான உண்மை .   1900–1947 தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டியாரால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் , இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும் , ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும் , தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். 1. ஏ. சுப்பராயலு ( 17 டிசம்பர் , 1920-11 ஜூலை , 1921)- நீதிக்கட்சி 2