திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு


நெருப்பாற்றில் நீந்தும் இயக்கம் திமுக என்பதற்கு

திமுக கடந்து வந்த பாதை முழு விபரங்கள்

காங்கிரஸை 1962லேயே தோற்கடித்திருக்கலாம் என்பதே எதார்த்தமான உண்மை.

 

1900–1947
தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது.

1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டியாரால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

1. ஏ. சுப்பராயலு (17 டிசம்பர், 1920-11 ஜூலை, 1921)- நீதிக்கட்சி

2. பனகல் ராஜா (11 ஜூலை, 1921- 3 டிசம்பர் 1926)- நீதிக்கட்சி

3. பி. சுப்பராயன் (4 டிசம்பர், 1926-27 அக்டோபர், 1930) சுயேச்சை

4. முனுசுவாமி நாயுடு (27 அக்டோபர், 1930-4 நவம்பர், 1932)நீதிக்கட்சி

5. ராமகிருஷ்ண ரங்காராவ் (5 நவம்பர், 1932-4 ஏப்ரல், 1936)- நீதிக்கட்சி

6. பி. டி. இராஜன் (4 ஏப்ரல், 1936- 24 ஆகஸ்டு, 1936) )- நீதிக்கட்சி

7. ராமகிருஷ்ண ரங்காராவ் (24 ஆகஸ்டு, 1936- 1 ஏப்ரல், 1937, 1936)- நீதிக்கட்சி

8. கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1 ஏப்ரல், 1937-14 ஜூலை, 1937) )- நீதிக்கட்சி

9. சி. இராஜகோபாலாச்சாரி (14 ஜூலை, 1937-29 அக்டோபர், 1939)- காங்கிரஸ்

10. த.பிரகாசம் (30 ஏப்ரல், 1946-, 23 மார்ச் 1947) - காங்கிரஸ்

11. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (23 மார்ச், 1947-6 ஏப்ரல், 1949) - காங்கிரஸ்

12. பூ. ச. குமாரசுவாமி ராஜா (6 ஏப்ரல், 1949- 26 ஜனவரி, 1950) - காங்கிரஸ்

13. பூ. ச. குமாரசுவாமி ராஜா (26 ஜனவரி, 1950- 9 ஏப்ரல், 1952) - காங்கிரஸ்

14. சி. இராஜகோபாலாச்சாரி (10 ஏப்ரல், 1952-13 ஏப்ரல், 1954)- காங்கிரஸ்

15. கே. காமராஜ் (13 ஏப்ரல், 1954-31 மார்ச், 1957)-இந்திய தேசிய காங்கிரஸ்

16. கே. காமராஜ் 13 ஏப்ரல், 1957-1 மார்ச், 1962-இந்திய தேசிய காங்கிரஸ்

17. கே. காமராஜ் (15 மார்ச்சு, 1962-அக்டோபர், 1963-இந்திய தேசிய காங்கிரஸ்

18. எம் பக்த வத்சலம் (2 அக்டோபர், 1963-6 மார்ச்சு, 1967) -இந்திய தேசிய காங்கிரஸ்


1962–1967
1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றையப் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன.


1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


1962 தேர்தலுக்குப்பின் தமிழ் நாடு காங்கிரசு வலுவிழக்கத் தொடங்கியது. 1962 இல் எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகினார். அவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவர் பொறுப்பேற்று டெல்லி சென்று விட்டார். அவருக்கு பதிலாக முதல்வரான பக்தவத்சலத்திடம் காமராஜரிடமிருந்த நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இல்லை. 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையின்மையைப் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.

1965 ஆம் ஆண்டு இந்தியாவின் தனி ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர நடுவண் அரசு முயன்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர். மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1965 இல் ஜனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும் இந்தியை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர். இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகளை இப்போராட்டம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.
 

 


பேரறிஞர் அண்ணா 1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி வரை முதல்வராக இருந்தார். இவர் மறைவையொட்டி வி.ஆர். நெடுங்செழியன் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 நாட்கள் இடைக்கால முதல்வராக இருந்தார்.

 

 



1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது.

இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. நாடாளுமன்றத்திற்கு 18 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தியது.

இவர்கள் தவிர, சட்டமன்றத்திற்கு 3 ஆதரவாளர்களையும், நாடாளுமன்றத்திற்கு 2 ஆதரவாளர்களையும் ஆதரிக்க முடிவு செய்தது.

திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸை எதிர்க்கும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.

1957 தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. பஸ் முதலாளிகள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள் என்று வேட்பாளர்களை காமராஜ் அறிவித்தார்.

திமுகவுக்கு பெரியாரின் எதிர்ப்பு வலுவாக இருந்தது. பத்திரிகைகள் அனைத்தும் காங்கிரஸையே ஆதரித்தன. முதல்முறையாக காங்கிரஸ் அரசு தனது சாதனைகளை விளக்கும் வகையில் பிரச்சாரப் படம் ஒன்றையும் எடுத்து மாநிலம் முழுவதும் திரையிட்டுக் காட்டியது.

இதையெல்லாம் மீறித்தான் திமுக தான் போட்டியிட்ட 142 தொகுதிகளில் 50 தொகுதிகளை தனித்தே கைப்பற்றியது. சுதந்திரா கட்சி 94 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 68 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் பெற்றன. 


 


இந்த மூன்று கட்சிகளில் திமுக 27.10 சதவீதமும், சுதந்திரா கட்சி 7.82 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7.72 சதவீதமும் வாக்குகளைப் பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி 46.14 சதவீதம் வாக்குகளை பெற்றது. மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் காங்கிரஸை 1962லேயே தோற்கடித்திருக்கலாம் என்பதே எத்ராத்தமான உண்மையாக இருந்தது.

மக்களைப் பாதிக்கும் அரசாங்கத்தை விரட்டி அடிப்பதைக் காட்டிலும் சொந்த பலன்களே முக்கியமாக கம்யூனிஸ்ட்டுகள் அப்போதே கருதியிருக்கிறார்கள்.

போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக வேட்பாளர்களில் கலைஞர் கருணாநிதி மட்டுமே இரண்டாவது முறை வெற்றிபெற்றார். அதேசமயம், முதல் தேர்தலில் தோல்வியடைந்த நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றனர்.

இந்தத் தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸும் பெரியாரும் பொன்முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். முத்துராமலிங்கத் தேவர் கடுமையான சொற்களால் திட்டி பிரச்சாரம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அண்ணாவின் தோல்வி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தேர்தல் முடிவுகளை அறிவதில்கூட ஆர்வம் காட்டுவதை தவிர்த்துவிட்டனர்.

இந்நிலையில்தான் திமுக 50 தொகுதிகளில் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 18 திமுக வேட்பாளர்களில் 7 பேர் வெற்றிபெற்றனர்.

அண்ணா தனது தோல்வியால் கழகத்தினர் யாரும் வருத்தப்படத் தேவையில்லை என்று நீண்ட அறிக்கை வெளியிட்டார். முன்பைவிட சட்டமன்றத்தில் திமுகவின் பணி செம்மையாக நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக சார்பில் சென்னையில் நடந்த வெற்றிவிழாவில் அண்ணா இப்படி பேசினார்…

நான் வெளியே நிற்கிறேன். என் அணிவகுப்பு உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாமல் அணிவகுப்பு அமைக்க முடியும். அணிவகுப்பு இல்லாத தலைவனை அமைக்க முடியாது.”



இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்றக் கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தலைவராகவும், கலைஞர் கருணாநிதி துணைத் தலைவராகவும், கே.ஏ.மதியழகன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை குழுத் தலைவராக நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் சட்டமன்ற மேலவைக்கும் மாநிலங்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணாவும் திமுக தயவில் சுதந்திரா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.

சட்டமன்ற மேலவைக்கு திமுக சார்பில் எம்ஜியாரும், திமுக ஆதரவுடன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் வஹாபும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திராவிடநாடு கோரிக்கையை மக்களவையில் பேசிய பிரதமர் நேரு கடுமையாக விமர்சித்தார். திமுகவை பிரிவினைவாத கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

அந்தப் பேச்சின் விவரத்தை பெற்ற அண்ணா மாநிலங்களவையில் நேருவுக்கு பதில் அளித்து பேசினார்…

இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும், இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?


இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது…” 


தமிழகம் முழுவதுமே இதே நிலைதான் நீடித்தது. வேலூரில் அண்ணா தலைமையில் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. தஞ்சையில் கலைஞர் தலைமையில் மறியலில் ஈடுபட்டோரை திருச்சி சிறையில் அடைத்தது.

சென்னையில் திமுகவுக்கு ஆதரவான கடற்கரையோர குடிசைவாசிகள் மீது கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு, அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கும் மறியலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மற்றோருக்கும் 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அண்ணாவும் முக்கியத் தலைவர்களும் சிறையில் இருந்த நிலையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற தொகுதி ஆகும். அங்கு வெற்றிபெற்ற டாக்டர் சுப்பாராயன் மகாராஸ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது.

1962 ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும், திமுக சார்பில் செ.கந்தப்பனும் போட்டியிட்டனர். நேரடிப்போட்டியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், ஜனசங்கம், தமிழ்தேசிய கட்சி, சோசலி்ஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக வேலை செய்தன. திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரித்தது.

பணபலம், படைபலம், அமைச்சர்களின் தீவிரப் பிரச்சாரம் எல்லாம் காங்கிரஸுக்கு இருந்தது. திமுக வேட்பாளருக்கு திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களின் பிரச்சாரம் மட்டுமே இருந்தது. என்றாலும் திமுக வேட்பாளர் கந்தப்பன் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றது முதல்தடவை என்ற வரலாறு தொடங்கியது.

அந்த தேர்தல் முடிந்த கையோடு அதே ஆகஸ்ட் மாதம் இறுதியில் சித்தூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் விஸ்வநாத ரெட்டியும், சுதந்திரா கட்சி சார்பில் என்.ஜி.ரெங்காவும் போட்டியிட்டனர். சுதந்திராக்கட்சி வேட்பாளரை திமுக ஆதரித்தது. இதிலும் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

 



அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு நேருவின் பேச்சை கிழித்தெறிந்தது… நேரு அதிர்ச்சியடைந்தார்…

அவர் மட்டுமல்ல காமராஜரும் திமுகவின் வளர்ச்சியைப் பார்த்து அதிர்ச்சியில்தான் இருந்தார். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியில் இருந்தாலும் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதியில் ஆளும் அரசாங்கத்தின் அத்தனை அதிகாரத்தையும் மீறி பேராசிரியர் அன்பழகன் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மாநகராட்சியின் 16 ஆவது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில்கூட காமராஜரால் ஜெயிக்க முடியவில்லை. திமுக தனியாகவே ஒரு சாமானியரை நிறுத்தி வெற்றிபெற்றது.

திமுகவின் வெற்றிகள் காமராஜரை கலங்கடித்தது. அந்த கலக்கத்தில் திமுகவை ஒடுக்கிவிட தவறான முடிவுகளை எடுத்தார்.

மூன்றாவது முறையாக முதல்வரான காமராஜர் வந்தவுடன் செய்த முதல்காரியம் கைத்தறி நூலின் விலையை அதிகரித்ததுதான். ஏழைக் கைத்தறித் தொழிலாளரின் வயிற்றில் அடிக்கும் இந்த முடிவை திரும்பப்பெறும்படி திமுக வலியுறுத்தியது.

அரசின் முடிவைக் கண்டித்து கோட்டை முன் 30 ஆயிரம் பேர் கொண்ட பேரணியை திமுக நடத்தியது.

அடுத்ததாக விலைவாசி உயர்வு பற்றி சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினார்கள். ஆனால் காமராஜ் அரசாங்கம் திமுக உறுப்பினர்களின் வேண்டுகோள்களை கண்டுகொள்ளளே இல்லை.

விலைவாசி உயர்வு நியாயமானதுதான் என்றும் அரசு விளக்கம் அளித்தது. விலைவாசி உயர்வை தடுக்க குழு ஒன்றை அமைக்க திமுக விடுத்த வேண்டுகோளையும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறிவிட்டது.

இதையடுத்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அதன்பிறகும் காமராஜ் அரசு கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் ஒருநாள் அடையாள மறியல் நடத்துவது என்று திமுக முடிவெடுத்தது.


இந்த மறியல் போராட்டத்தை ஒடுக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அடக்குமுறை தர்பார் திமுக மீதான மக்கள் அனுதாபத்தை அதிகரிக்கவே உதவியது. மறியலில் ஈடுபட்டோரை அணி அணியாக கைது செய்து சிறையில் அடைத்தது. சென்னை மத்திய சிறையில் 2500 பேரை மட்டும் அடைக்க முடியும். ஆனால், ஆறாயிரம் திமுகவினரை சிறைக்குள் திணித்து காமராஜ் அரசு பழிவாங்கியது. 

அதைப் பற்றியெல்லாம் அண்ணா கவலைப்படவில்லை. திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் உறுதியான முடிவை எடுத்தார்.


இந்தியாவில் தலாய்லாமா

இந்தியா சீனா இடையே எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க தலாய் லாமா மறுத்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இது சீனாவுக்கு கடுப்பேற்றியது.

1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். எனினும் சர்வதேச தலையீடுகள் காரணமாக 1962, நவம்பர் 20ல் சீனா போர்நிறுத்தம் அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தது. சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து சீனா பழைய நிலைக்கு திரும்பியது.

இந்தப் போர் சமயத்தில் திமுக மத்திய அரசுக்கு ஆதரவாக தனது நிலையை அறிவித்தது. நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து கைகோர்ப்போம் என்று அண்ணா அறிவித்தார். பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதாகவும் அறிவித்தார். அதேசமயம் பிரிவினை கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும் அண்ணா தெரிவித்தார்.

ராணுவ வீரர்களுக்கு ஏராளமான ரத்தம் தேவைப்படும் என்றும், திமுகவினர் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். யுத்தநிதி வசூலித்து முதல்வர் காமரஜரிடம் கொடுக்கச் செய்தார்.

பிரிவினை கோரும் கட்சிகளைத் தடைசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டதால்தான் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதாக விமர்சனம் எழுந்தது. அதாவது, இந்தியா மீது அன்னிய நாடு போர் தொடுப்பதை எதிர்த்து இந்திய அரசுடன் இணைந்து போராட திமுக முன்வந்த நல்ல முடிவையும் சிலர் கொச்சைப்படுத்தினர்.

இந்தியா மீது சீனா போர்தொடுத்த சமயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருபிரிவினர் சீனா ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் சோவியத் ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர்.

இந்தியா மீது சீனா போர்தொடுத்த அதேசமயத்தில்தான், கியூபாவுக்கு சோவியத் யூனியன் ஏவுகணை வழங்கியது தொடர்பாக அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

சீனா ஆதரவு, சோவியத் ஆதரவு என்ற இரு குழுக்களாக பிரிந்த கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்குள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டனர். சீன ஆதரவு நிலையை எடுத்த நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

சோவியத் ஆதரவு நிலை எடுத்த தலைவர்கள் காங்கிரஸ் அரசின் ஆதரவோடு கட்சியில் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் இரண்டாக பிளவுபட்டது.

டாங்கே தலைமையிலான வலதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்களை எதிர்த்து 32 முக்கிய தலைவர்கள் வெளியேறி தனியாக மாநாடு நடத்தினர். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களுக்கு தலைமை வகித்தார்.

1964 அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இடதுசாரிகளின் மாநாட்டில் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள கட்சியின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று பிரகடனம் செய்தனர்.

கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் பி. சுந்தரய்யா பொதுச் செயலாளராகவும், பி.டி. ரணதேவ், பிரமோத் தாஸ்குப்தா, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட், எம். பசவபுன்னையா, ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், பி. ராமமூர்த்தி, ஏ. கே. கோபாலன், ஜோதி பாசு ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தியா – சீனா யுத்தம் முடிந்த கையோடு, 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டது. அந்தத் திருத்தத்தை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா மாற்றவேண்டும் என்று கோரினார். அதாவது, ஆங்கில் இந்தியுடன் தொடரும் என்று உறுதிபட இருக்க வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார்.

ஆனால், அந்தத் திருத்தத்தை ஏற்காமலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் தொடங்கியது.

1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை திமுக நடத்தியது. அந்த மாநாட்டில் அரசியல் சட்டத்தின் 17 ஆவது பகுதியை அண்ணாவும் அவருடன் 500 பேரும் எரித்து கைதாகினர்.நிலைமை உக்கிரமடைந்தது.

1957 தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. பஸ் முதலாளிகள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள் என்று வேட்பாளர்களை காமராஜ் அறிவித்தார்.

போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக வேட்பாளர்களில் கலைஞர் கருணாநிதி மட்டுமே இரண்டாவது முறை வெற்றிபெற்றார். அதேசமயம், முதல் தேர்தலில் தோல்வியடைந்த நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றனர்.

இந்தத் தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸும் பெரியாரும் பொன்முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். முத்துராமலிங்கத் தேவர் கடுமையான சொற்களால் திட்டி பிரச்சாரம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்றக் கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தலைவராகவும், கலைஞர் கருணாநிதி துணைத் தலைவராகவும், கே.ஏ.மதியழகன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை குழுத் தலைவராக நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் சட்டமன்ற மேலவைக்கும் மாநிலங்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணாவும் திமுக தயவில் சுதந்திரா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.

1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஏற்படுத்திய அரசியல் திருப்பம்
முந்தைய தேர்தலில் வெறும் பதினைந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த திமுக அந்த தேர்தலில் அதைப்போல அதைவிட மூன்று மடங்குகளுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக, நாடாளுமன்றத்துக்கு 7 உறுப்பினர்களை அனுப்பியது. இது அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் ஐந்து தொகுதிகள் அதிகம்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணா எழுதிய கட்டுரை “காஞ்சிபுரத்துத் தேர்தல் ரகசியம்” பின்பு புத்தகமாக வெளியானது. அதில் அண்ணா பதிவு செய்திருந்த செய்திகள் முக்கியமானது.

“காமராசர் ஒருமுறை என்னிடமே கேட்டார், ‘ஒரு 5 லட்சம் ரூபாய் செலவிட்டால் உன்னைத் தோற்கடிக்க முடியாதா?” என்று. அதை அவர் இப்போது செய்துகாட்டியுள்ளார். எங்களைத் தோற்கடிக்க 5 லட்சம் இல்லை. கணக்கிலடங்காத லட்சங்களை செலவிட்டிருக்கிறார்கள். அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

அண்ணா அந்த தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினரை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தது. உடனடியாக அவரைத் தேற்றும் காரியங்களில் இறங்கினார் அண்ணா.

“உள்ளம் உடைய இடம்கொடுக்கக் கூடாது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கழகப் பணியாற்றக் கிளம்புங்கள். நான் வெளியே நிற்கிறேன். எனது அணிவகுப்பு உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாமல் அணிவகுப்பு நடக்க முடியும். ஆனால் அணிவகுப்பு இல்லாத தலைவனை அமைக்க முடியாது. என் தோல்வி பற்றி வருந்துபவர்கள் நான் இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னைத் திட்டமிட்டு ஒழித்துக்கட்டுவார்கள் என எனக்கு முன்பே தெரியும். நெடுஞ்செழியனிடமும், கருணாநிதியிடமும் நான் இதுபற்றி பேசியிருக்கிறேன். எப்படி எங்கள் 15 பேரையும் ஒழிக்கப்போவதாகக் கூறி 50 இடங்களைக் கோட்டை விட்டார்களோ, அதேபோல் அடுத்த முறை 50 பேரை ஒழித்துக்கட்ட போவதாக புறப்பட்டு 75 இடங்களை கோட்டை விடுவார்கள். வெற்றிபெற்று வருகிறது கழகம். நாட்டு மக்களின் ஆதரவு வளர்ந்து வருகிறது. இது சாதாரணமானதல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை எண்ணி உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்" என உரையாற்றினார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அண்ணா, ராஜாஜி, காயிதே மில்லத், ம.பொ சிவஞானம், பி.ராமமூர்த்தி ஆகியோர் கழுதை மீது ஏறிக்கொண்டு கோட்டை நோக்கிச் செல்வதாக அந்தக் கேலிச்சித்திரம் கூறியது. திமுக தலைவர்கள் பலருக்கு இது பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராஜாஜியோ துளிகூட பதற்றத்திற்கு ஆளாகாமல், ”காங்கிரஸின் வசமுள்ள கோட்டையை பிடிக்க குதிரை வேண்டாம், கழுதையே போதும் என அவர்கள் எண்ணுகிறார்கள் போலும். எதில் ஏறிப்போனால் என்ன? கோட்டை சேர்ந்தால் சரி” என்றார்.

விகடனில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தை சுவரொட்டிகளாக மாற்றிப் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் கட்சி. தலைவர்களை கேலி செய்யும் அந்த சுவரொட்டிகளுக்கு தடை விதிக்காதது ஏன்? என்ற கேள்வியெழுப்பிய மு.கருணாநிதி,

“எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்யமுடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! இன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!" என்று பிப்ரவரி 1967 அன்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசினார்.

திமுகவுக்கு சாதகமான அரசியல் சூழல் அமைந்தது. ஆனாலும் பெரியாரின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குதான் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் அண்ணாவிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியானது. படி அரிசித் திட்டம்: ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாகக் காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் திமுக தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் என்றார். அண்ணாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் உங்களால் முடியுமா என்று பதில் சவால் விட்டனர் காங்கிரஸார்.

இத்தகைய வாய்ப்புக்காக காத்திருந்த அண்ணா, ”ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களுடைய பெருவாரியான ஆதரவை திமுகவிற்கு அளித்திருந்தனர். ஆம், திமுகவுக்கு 138 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் 25 இடங்களில் திமுகவினர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சி 49 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

வெற்றிச்செய்தி வந்ததும் அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரியாரைச் சந்திக்க விரும்பினர். அப்போது பெரியார், திருச்சியில் இருந்தார். 29 பிப்ரவரி 1967 அன்று அண்ணா, நெடுச்செழியன், கருணாநிதி ஆகியோர் பெரியாரைச் சந்தித்தனர். “என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்களைத் தோற்கடிக்க நான் எவ்வளவோ பாடுபட்டேன். ஆனால் நீங்கள் வென்றுவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன். எனக்கும், என்னுடைய கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் ஆதரவாக இருந்து வரக்கூடிய உங்களுக்கு என் அன்பும், ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் பெரியார்.

திமுகவின் வெற்றியைப் பற்றி பின்னாட்களில் பேசிய பெரியார், “அண்ணா போல தனியான ஒரு கொள்கையை ஏற்படுத்தி, அதன்பேரில் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்தவர் உலகிலேயே லெனின் மட்டும்தான்” என்றும் பெருமையாக பேசினார்.

திமுக பிரமாண்ட வெற்றிபெற்றிருந்த அந்த சமயத்தில், அந்தக் கட்சியின் சார்பாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டிய அண்ணாவோ தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார். எனில் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அண்ணா ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், அப்படிப் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவைக்கு முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் ஆரம்ப நிலையில் இருந்து உழைத்து, சிறைசென்று, போராட்டங்களில் பங்கெடுத்த பல தொண்டர்களும், தலைவர்களும் இருந்ததால் அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக நெடுஞ்செழியன், மு.கருணாநிதி இருவரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணா, “அமைச்சர் பதவியை கொடுக்கவேண்டும் என பலரும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் மகிழ்ச்சியை விடத் தொல்லைகளையும் துயரங்களையும் தான் அதிகமாகத் தாங்கவேண்டி வரும் எனக் கருதுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

திராவிடர் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு, முதல் தேர்தலைப் புறக்கணித்து, அடுத்தடுத்த தேர்தல்களில் படிப்படியாக அதிக இடங்களைப் பெற்று, மூன்றாவது தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தது பேரறிஞர் “அண்ணா” தலைமையிலான “திமுக”.
1967ல் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திமுக 137 இடங்களில் வென்று மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அப்போது, ’திமுகவின் வெற்றியைக் கொண்டாடலாமா?. காமராசர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றிருக்கிறார் அதை போஸ்டர் அடிக்கலாமா?’ என்று கட்சியினர் கேட்ட போது, “காமராஜரின் தோல்வியை கொண்டாடாதீர்கள். அது கொண்டாட கூடியதல்ல. காமராஜர் போன்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதனால் நமது வெற்றிக் கொண்டாட்டங்களைத் தள்ளிப் போடுங்கள்” என்று சொன்னவர் அண்ணா. முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்திடம், ‘நல்லாட்சி நடத்த யோசனைகள் இருந்தால் கூறுங்கள்’ என்று பெரிய மனதோடு கேட்டவர் அண்ணா.

தன்னிடம் இருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து சென்றபோது, ‘காது புண்ணானதால் தோட்டைக் கழட்டி வைத்திருக்கிறோம். மீண்டும் அணிவோம்’ என்று பரிவோடு சொன்னார் அண்ணா. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா சென்றபோது, ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் தோல்வி அடைந்தது?’ - என்று கேட்கப்பட்டது. அப்போது, ‘நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததால்...என்று பதில் சொன்னார் அண்ணா. அங்கே அவர் காங்கிரசைக் குறை சொல்ல விரும்பவில்லை.
அண்ணா அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்றபோது, அவரது மனைவியைத் தவிர, உறவினர்கள் வேறு யாருக்கும் பதவி ஏற்பு விழாவுக்கான சிறப்பு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படவில்லை. அவர்கள் வெளியே மக்களோடு நின்றுதான் விழாவில் பங்கெடுத்தனர். உறவினர்களுக்கு அவர் பதவியையோ, சிபாரிசையோ ஒருபோதும் வழங்கியதும் இல்லை.
1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர், அவரது இல்லத்திற்கு சோபாக்கள், நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. ’அவற்றை மாடியில் வைக்கலாமா?’ - என்று கேட்ட ஊழியர்களிடம், ‘கீழேயே வைத்துவிடுங்கள், நாளை பதவி போனால் எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும்!’ என்றார் அண்ணா. அவருக்குப் பதவி ஆசை துளியும் இருந்தது இல்லை.
அண்ணா அவர்கள் தலைசீவியதையோ, கண்ணாடி பார்த்ததையோ யாரும் பார்த்ததே இல்லை. 1967ஆம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு மாளிகையில் இடம் இல்லை என்று சொல்லப்பட்டதால் தனது காரிலேயே தூங்கியவர் அண்ணா. 1968ல் தமிழக முதல்வராக இருந்தபோது தோள் பகுதியில் கிழிந்திருந்த சட்டையைத் துண்டால் போர்த்தியபடி பயன்படுத்தியவர் அண்ணா.



அதன்பின் கலைஞர் மு. கருணாநிதி 1969-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி முதன்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.



கலைஞர் மு. கருணாநிதி 1971-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை 693 நாட்கள் முதல்வராக செயல்பட்டார். பின்னர் 1971-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி 2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை பதவியில் நீடித்தார்.



பிளாஷ்பேக்: 1971 தேர்தல் கணிப்புகளை தகர்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி

திமுக ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் முதல்வராக இருந்த அண்ணா திடீரென மறைந்தார். இதையடுத்து ஏகோபித்த ஆதரவுடன் முதல்வர் பதவிக்கு கலைஞர் தேர்வு செய்யப்பட்டார். அதே காலத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி பொறுப்பு வகித்தார். தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியல் களத்திலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகளை தேசியமயமாக்குதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு மத்தியில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீர் உசேன் திடீரென இறந்தார். புதிய குடியரசு தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் கட்சியின் மூத்த தலைவர்கள் காமராஜர், நிஜலிங்கப்பா உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் இந்திராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் சஞ்சீவரெட்டியை எதிர்த்து இந்திராகாந்தி ஆதரவுடன் வி.வி.கிரி போட்டியிட்டார்.

இந்திராவின் வேண்டுகோளை ஏற்று வி.வி.கிரிக்கு திமுக ஆதரவு அளித்தது. காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் கிரி வெற்றி பெற்றார். இதையடுத்து இந்திரகாந்தி பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு முன்பே கலைத்து தேர்தலுக்கு பரிந்துரை செய்தார். அதேபோல் தமிழக சட்டசபையையும் கலைத்து தேர்தலுக்கு கலைஞர் பரிந்துரை செய்தார். 1971 தேர்தலில் முதல் முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த அணியில் இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் இணைந்தன. அதுவரை எதிரும் புதிருமாக இருந்த காமராஜரும், ராஜாஜியும் ஓரணியில் திரண்டனர். திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பழைய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங்கம் ஆகியன ஓரணியாக போட்டியிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேருவதில் தாமதம் ஏற்பட்டதால் சட்டசபைக்கு போட்டியிடவில்லை. மாறாக கூட்டணியில் 10 எம்பி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. முந்தையை தேர்தல் வரை திமுகவை எதிர்த்து பெரியார் பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியை பெரியார் ஆதரித்தார். இரு தரப்பிலுமே பிரசாரம் கடுமையாக இருந்தது. காமராஜர்-ராஜாஜி ஆகியோர் இணைந்து சென்னையில் பிரமாண்ட கூட்டம் நடத்தினர். அதற்கு வந்த கூட்டத்தை பார்த்து அந்த அணியே வெல்லும் என கருத்து கணிப்புகள் கூட வெளியாகின. பிரசார மேடையில் காமராஜருக்கு, ராஜாஜி வெற்றி திலகமிட்டார். அரசு உயர் அதிகாரிகள் சிலர் தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே காமராஜரை சந்தித்து வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் அப்ேபாது வெளியாகின. 1971 மார்ச் 1,4,7 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கணிப்புகள் தவிடு பொடியாகின. 350 இடங்களில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்திலும் காங்கிரஸ்-திமுக அணியே 38 இடங்களில் வெற்றி பெற்றது. நாகர்கோவிலில் மட்டும் காமராஜர் வெற்றி பெற்றார்.

சட்டசபைக்கு 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களை கைப்பற்றியது. 201 இடங்களில் போட்டியிட்ட பழைய காங்கிரஸ் 15 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சுதந்திராகட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தது. திமுகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரமாண்ட வெற்றியுடன் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. முதல்வர் கலைஞர் தலைமையில் 13 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது. சபாநாயகராக திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மதியழகன் பொறுப்பேற்றார்.

திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி பூங்குன்றன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும் அந்த பேரணியில் பங்கேற்றேன். பெரியார் ஒரு ட்ரெக்கில் வந்து கொண்டிருந்தார். அவருக்கு கருப்பு கொடி காட்ட ஜனசங்கத்தினர் அனுமதி பெற்றிருந்தனர். கருப்பு கொடி காட்டும் போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் பெரியாரின் வாகனம் கடந்து சென்று விட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ஊர்வலத்தில் வந்த ட்ரெக்கில் இருந்த ராமர் படத்தை அடித்தனர். இது தான் நடந்தது.

பச்சை பொய்

ராமர், சீதை படங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ரஜினிகாந்த் சொல்வது பச்சை பொய். ராமர் படத்துக்கு மட்டும் அல்ல, எந்த படத்துக்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கவில்லை. இந்த நிகழ்வை ஒட்டி நடந்த சம்பவங்களை தொகுத்து, தடை செய்யப்பட்ட ‘துக்ளக்’ என்ற புத்தகம் வெளியானது.

அதிலும் கூட ராமர் படம் ஆடை இல்லாமல் கொண்டு வரப்பட்டதாகவோ, செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவோ குறிப்புகள் இல்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருந்த நிலையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டதை போன்று தி.மு.க.வுக்கு இந்த விவகாரம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராமனை செருப்பால் அடித்த தி.மு.க.வுக்கு உங்கள் ஓட்டா? என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தார்கள். ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடிப்பது போலவும் அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் கருணாநிதி ‘சபாஷ், சபாஷ்’ என்று கூறுவதை போன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது முந்தைய தேர்தலில் 138 இடங்களையே பிடித்திருந்த தி.மு.க., அந்த தேர்தலில் 183 இடங்களை பிடித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிடர் விடுதலை கழக தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:-

ரஜினி குறிப்பிடும் அந்த பேரணி 24.1.1971 அன்று சேலத்தில் நடந்தது. அங்கு நடந்த 2 நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு பேரணி அது. அந்த மாநாட்டிற்கு தடை கோரி அன்றைய ஜன சங்கம் கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். அந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது கருணாநிதி தான். பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டத்தினர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினர். அது பின்னால் வந்த வண்டியில் விழுந்தது. அந்த வண்டியில் தான் ராமர், சீதை படங்கள் இருந்தது.

தந்தை பெரியார் 12.2.1971 அன்று பொறுமையாய் இருங்கள் தோழர்களே என்று தலையங்கம் எழுதினார்.

அந்த எதிர்ப்பையும் மீறி கழகம் சட்டசபைக்கு 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களை கைப்பற்றியது. 201 இடங்களில் போட்டியிட்ட பழைய காங்கிரஸ் 15 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சுதந்திராகட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தது. திமுகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரமாண்ட வெற்றியுடன் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. முதல்வர் கலைஞர் தலைமையில் 13 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது. சபாநாயகராக திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மதியழகன் பொறுப்பேற்றார். 






1976 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மை காரணங்களும் கவர்னர் அறிக்கையும்

(மார்ச் 15,1971 – ஜனவரி 31 ,1976)
Sardar Ujjal Singh, Governor (upto 26th May 1971)
Thiru Kodardas Kalidass Shah, Governor (From 27th May 1971)
Thiru K.A. Mathialagan, Speaker (From 24th March 1971 to 2nd December 1972)
Puluvar K. Govindan, Speaker (From 3rd August 1973)
Thiru P. Seenivasan, Deputy Speaker (From 24th March 1971 to 9th March 1974
Thiru N. Ganapathy, Deputy Speaker (From 17th April 1974 to 31st January 1976)
எதிர்கட்சித் தலைவர் –பொன்னப்ப நாடார்

கைப்பற்றிய தொகுதி 205

திமுக ஆட்சி 1976 இல் கலைக்கப்பட்ட பின்னணியும் கவர்னர் அறிக்கையும்

திமுக ஆட்சி கலைக்கப்பட திட்டமிட்டே பல காரணங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று முறையற்ற ஆட்சி. அதில் வீராணம் திட்டமும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதை கமிசன் அமைத்து விசாரிக்கலாமே. ஆட்சியை கலைக்க வேண்டியதில்லையே.

உண்மையான காரணம் கலைஞர் எமர்ஜென்சிக்கு ஒத்துழைப்பு தராததும் அதை எதிர்த்ததும்தான்

திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்கள்

1)இந்திரா தேர்தல் வெற்றி சட்டப்பூர்வமாக செல்லாது என்று ஷோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கிற்கு 1975 ஜுன் 12 ம் நாள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தஞ்சைமாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், இந்திராகாந்தி ராஜினாமா செய்யவேண்டுமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்தார்.

2) 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த செயற்குழுவில், எமெர்ஜென்சிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 6ம் தேதி சென்னை கடற்கரையில், தலைவர் கலைஞர் தலைமையில் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.

3) தலைவர் கலைஞரும், பெருந்தலைவர் காமராஜரும், பூந்தமல்லி சாலையில் உள்ள டாக்டர் அண்ணாமலை அவர்கள் இல்லத்தில் தனியாகச் சந்தித்து இதுகுறித்து நீண்ட் ஆலோசனையும் நடத்தினர். அப்போது கலிவரதன் உடன் இருந்தார். பெருந்தலைவர் காமராஜர், "தேசம் போச்சு தேசம் போச்சு" என்று வேதனையோடு கூறியதை அனைவரும் அறிவார்கள்.

4) ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் துவங்கியதும் தி.மு.க உறுப்பினர்களாக இருந்த இரா. செழியன் மக்களவையிலும், மாரிச்சாமி மாநிலங்களவையிலும் அவசரநிலையினை எதிர்த்து கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர்.

5) இந்திராகாந்தி அந்த சமயத்தில், இந்தியாவில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று தி.மு.க தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத் மாநிலம் என்று கூறி இந்த இரண்டு மாநில ஆட்சிகளையும் குறிவைத்து கடுமையாக எச்சரிப்பதுபோல பேசினார்.

6) திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 1975 ஆகஸ்ட்9,10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல்லை மாநாட்டிலும், அதே ஆண்டு கோவையில் டிசம்பர் 28ல் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் அவசரநிலை குறித்து தி.மு.கவின் கண்டன தீர்மானமும், தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சும் அமைந்தது.

இம்மாநாடுகளுக்குப் பிறகு, பம்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது, ஆர்.எஸ்.எஸ், ஆனந்தமார்க் , நக்சலைட் இயக்கங்கள் போன்று தி.மு.கவும் தடைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 26 இயக்கங்கள் அவசர நிலைகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.

7) சஞ்சீவ ரெட்டியும் அடிக்கடி வந்து தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திப்பது உண்டு. ஜார்ஜ் பெர்னாட்டஸும் தலைவர் கலைஞர் அவர்கள் உதவியால் சென்னையில் வந்து தங்கியிருந்ததால் மத்திய அரசால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. அவர் கல்கத்தாவிற்கு ரயிலில் சென்ற போதுதான் எம்.கே.நாராயணன் மூலமாக உளவறியப்பட்டு தமிழக எல்லைக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.

😎 அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,"என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்" என்று பாராட்டிச் சொன்னார்.

அப்போதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் நிர்மாணித்த, வள்ளுவர் கோட்டம் அமையும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31-நாளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

(நன்றி K.S. ராதாகிருஷ்ணன்)

****
உண்மையில் ஆளுனர் அறிக்கை
யாரால் தயாரிக்கப்பட்டது.?

1971 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக கே.கே.ஷா பொறுப்பேற்றார். இவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூகநீதி திட்டங்களில் மனதை பறிகொடு்ததார். அதனால்தான் தனது பெயருக்கு முன் உள்ள கே.கே. என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களுக்கு கலைஞர் கருணாநிதி என்று விளக்கம் அளித்தார். அதாவது தனது பெயரை கலைஞர் கருணாநிதி ஷா என்று அழைப்பதை பெருமையாக நினைப்பதாக கூறினார். அந்த அளவுக்கு மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நல்லுறவு இருந்தது.

ஆனால், அத்தகைய ஆளுநரிடம் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்க 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இந்திரா தலைமையிலான மத்திய அரசு வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றது. இதை அவரே பின்னர் தெரிவித்திருக்கிறார். திமுக ஆட்சி கலைப்புக்கு பிறகு மேலும் 5 மாதங்கள் அந்த பொறுப்பில் நீடித்தார்.

கவர்னர் அறிக்கையின் முழுவிபரம்

(1) முறையற்ற ஆட்சி (Maladministration)

இதன் கீழ் 7 குற்றச்சாட்டுகள் திமுக மீது சுமத்தப்பட்டது

அ)..வீராணம் திட்டம் முறைகேடு

ஆ) 1973 ல் மத்திய அரசு தந்த வறட்சி நிவாரண நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது
( AG Report)

இ). தமிழக மருத்துவக் கல்லூரிகளின் Admission ஐ
centralize செய்தது திமுக. இதனால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்ளித்தது

ஈ) நான்காவது ஐந்தாண்டு திட்ட நிதியை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியது

எ) On account of the administrative interference, Shri Kattur Gopal, President of the Dravidian Labour
Progressive Federation, which is the Labour Front ofthe DMK Party was installed as President of the 10,000 strong Simpson Group workers and Staff Union, displacing
Gurumurthy of INTUC (Indian National Trade Union
Congress). This action sparked off unprecedented trouble in
the Simpson Group offactories.

ஏ). The Government machinery of the State was liberally employed for collection offunds for the party.

ஐ) There were numerous instances of interference and misuse
of Government machinery including the use of Police force
for the purpose of furtherance of party interests.

(2) பத்திரிக்கை தணிக்கையினை சரியாக செய்யாதது

Immediately after the Proclamation of Emergency by Mrs. Indira Gandhi in 1975, the State Government issued its own censorship orders under mle 48 of Defense and Internal Security ofIndia Rules (Acts), 1971.

When the Central Government issued detailed basic censorship order, the State Government officials did not faithfully carry out censorship according to the guidelines issued by the Centre.

This resulted in the free circulation of a lot ofliterature including newspapers containing exhortations and public speeches highly critical of emergency
measures. These publications found their way to the neighbouring states also and complaints were received from Kerala and Pondicherry about the difficulties faced by them by the flow of such literature from Tamil
Nadu.

(3)அவசரநிலையை சரியாக
அமல்படுத்தாமை மற்றும்
எதிர் கட்சி பத்திரிக்கைகளை தவறாக பயன்படுத்தல்

Apart from the laxity in the implementation of emergency
measures, there were glaring instances of misuse ofpower.

For instances the power vested in the State Government under rule 47(1) of Defence and Internal Security of India Rules, 1971 was misused to muzzle news media belonging to opposition parties.

(4)தனித்தமிழ்நாடு கோரிக்கை

Under cover of demand for State autonomy, DMK leaders
including the Chief Minister Mr. M. Karunanidhi and other Ministers
from time to time held out veiled threats of session in case the desired autonomy was not granted. Sinister comparisons were made in their public utterances with the events in Bangaladesh and the fate of Mujibur Rehman.

Some ofthe DMK leaders gave a threat of revolution in Tamil Nadu ifthe life ofthe State Assembly was net extended. In the Fifth State Conference ofDMK held from 25 to 28th December, 1975 at Coimbatore,4 it was underlined that if the party’s demand for State
autonomy was not conceded, the DMK would have no alternative but to revive its earlier demand for 'Separate Tamil Nadu’.

The sustained campaign involving propaganda, agitational approach and indirect encouragement of a climate of violence on the part ofthe DMK party to achieve the above purpose was against the concept of national
integration.

இந்திரா காந்தியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் அரசைக் கவிழ்த்த அரசியல் சக்தியில் மிக முக்கியப் பங்கையும் கலைஞர் கொண்டிருந்தார்.
1975ஆம் ஆண்டின் ஜூன் 25, 26 தேதிகளில் இந்திரா காந்தியின் அரசு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, தமிழக அரசின் முதல்வராகவும் திமுக கட்சியின் தலைவராகவும் கலைஞர் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவசர நிலைப் பிரகடனத்தைப் பற்றிய நிறைந்த புரிதலுடன் அதை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அவர் கொண்டிருந்தார். அப்போது தனது கட்சி பலவீனப்படுத்தப்பட்டு ஆட்சியை இழந்தபோதிலும், இதன் தாக்கம் ஏழு மாதங்கள் வரை தமிழகத்தின் மீது விழாமல் பார்த்துக்கொண்டார். அவரது அரசு கடைசியாக 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் தீவாக உருவெடுத்த தமிழ்நாடு, வடஇந்தியாவிலிருந்து அவசர நிலைப் பிரகடனத்தைக் கண்டு அஞ்சிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியது. அவசர நிலைக்கு எதிராகப் பத்திரிகைகளில் ஒரு வார்த்தைகூட எந்தவிதச் செய்தியும் வர முடியாமல் இருந்த அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.கே.கோபாலனின் பேச்சு தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நெருக்கடியை உணர்ந்த கலைஞர்
அவசர நிலைப் பிரகடனத்துக்கு முன்பு வரையிலான நிகழ்வுகளைப் பார்க்கும்போதே, தன் ஆட்சி கலைக்கப்படும் என்பதைக் கலைஞர் முன்கூட்டியே அறிந்திருந்தார். மாநில அரசுகளுக்குச் சுயாட்சி வேண்டும் என்று கலைஞர் தனது பல்வேறு மேடைப் பேச்சுகளில் முழங்கியுள்ளார். இதேக் கோரிக்கையும் அதற்கான அதிர்வலைகளும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்திரா காந்தியின் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் கலைஞர் க்கு நல்ல நட்புறவு இருந்தது.
1971 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காந்தியின் வெற்றி குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திரா காந்தி தோல்வியைச் சந்தித்தது அவரது அரசுக்கு எதிரான முதல் அடியாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பு இந்திரா காந்தியை ஆறு ஆண்டுக் காலத்துக்கு தகுதியிழக்கச் செய்தது. இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நெருக்கத் தொடங்கிவிட்டனர்.
தஞ்சாவூர் சென்றிருந்த கலைஞர் யிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்டபோது, “இப்போது ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாகும். உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்து வருகிறது. இந்தக் காரணிகளைக் கருத்தில்கொண்டு, மத்தியில் ஆளும் அரசால் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் எதிர்கால அரசியலுக்கு முன்னோடியாக அமைகின்றன. இதே போன்றதொரு நிலைமை தமிழகத்தில் திமுக கட்சிக்கு நேர்ந்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இவ்வாறே இருந்திருக்கும்” என்றவர், இந்திரா காந்தி ராஜினாமா செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்குப் பதிலாக, “அவர் ராஜினாமா செய்திருந்தால் அந்த முடிவை நாங்கள் பாராட்டியிருப்போம்” என்றார்.

இந்தச் சமயத்தில்கூட 1971ஆம் ஆண்டில் தான் கூட்டணியமைத்த காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவரையும் மிகவும் கண்ணியமாகவே கலைஞர் பேசியுள்ளார். பின்னர் ஜூன் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதோடு, இந்திரா காந்தி பிரதமராகத் தொடர்ந்து செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், இந்திரா காந்தியின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. இந்திரா காந்திக்கு எதிரான நீதிமன்றத்தின் இந்தத் தற்காலிக உத்தரவு நிபந்தனைக்குரியது என்பதால் இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜ் நாராயண் முறையிட்டார். இந்தக் கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்பதாக இல்லை. இதனால் ஜூன் 29ஆம் தேதி தேசிய அளவில் ஒரு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்த எதிர்க்கட்சியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக கலைஞர் யும் பங்கேற்றார்.

இதன் விளைவாக, அமைச்சரவை உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமலேயே அவசர நிலை ஆட்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பல்வேறு சட்டங்களையும் உத்தரவுகளையும் அரசியல் சட்டம் பிரிவு 19இன் கீழ் செயல்படுத்தினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோருக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை அணுக இதன்படி தடை விதிக்கப்பட்டது. பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் இந்திரா காந்தி முடக்கினார்.
இந்திரா காந்தியின் இந்த அவசர நிலை பிரகடனத்துக்கு இரண்டு மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. இதுபற்றி, டேவிட் செல்போர்ன் தனது ‘An Eye to India: The Unmasking of a Tyranny’ என்ற புத்தகத்தில், இந்த அரசுக்கு முடிவு கட்டவும், வலிமையான மற்றும் நிலையான கூட்டாட்சி அரசை உருவாக்கவும், கலைஞர் தலைமையிலான தமிழக அரசும், பாபுபாய் ஜே.படேல் தலைமையிலான குஜராத் அரசும் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியை எதிர்த்து நின்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றி திமுகவிடம் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்ததால் திமுகவுக்கு எதிரான பலமான குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களையும் திரட்டியது. சில மாதங்களிலேயே குஜராத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கி இருப்பதாகவும், மக்களைத் தவறான முறையில் வழிநடத்துவதாகவும் காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அவ்வாறு மாநில அரசுகள் (தமிழகம்) அதன் மக்களைத் தவறாக வழிநடத்தியிருந்தால் அதில் தேசியக் கட்சி தலையிட்டாக வேண்டும். எனவே, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த திமுகவுக்கு எதிராக இந்திரா காந்தி தனது நடவடிக்கையில் இறங்கினார். முதற்கட்ட நடவடிக்கையாக, 1976 ஜனவரி 9ஆம் தேதி மக்களவையில் இந்திரா காந்தி பேசுகையில், “என்னைப் பற்றிய அவதூறான தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாக அங்குள்ள எங்களது காங்கிரஸ் உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தனிநபர் மேம்பாட்டுச் செலவுகள் தேசியச் சராசரியை விட மிகவும் சரிவடைந்துவிட்டது” என்றவர், “எந்தவோர் அரசாங்கத்தையும் (மாநில அரசு) இயக்குவது எனது பழக்கமே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் நான் அவ்வாறு செய்ய வேண்டும்; ஏனென்றால், தங்களின் சொந்த செயல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவர்கள் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார்கள்” என்று தனது திமுகவுக்கு எதிரான தனது அஸ்திரத்தைத் தொடுத்தார்.

ஜனவரி 31, 1976 : தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான நாள் என கூறலாம்.
ஆம், இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்ததாலோ, அல்லது மகோரா என்னும் சூழ்ச்சியின் உருவத்தின் செயலால் இந்திரா மேற்கொண்ட நடவடிக்கையோ, தலைவர் கலைஞரின் அரசு கலைக்கப்பட்டது.
திமுக.வில் இருந்து வெளியேறிய நாள் முதல் ஊழல் புகார் பட்டியலை ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் என்று எடுத்து சென்று அளித்தும் பயனில்லையே என்று விரக்தியில் இருந்தார் MGR.
1975ல் லோக் நாயகி ஜெயபிரகாஷ் நாராயணன் சென்னையில் கர்ஜிக்க இருப்பதை அறிந்த MGR ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்க அழைப்பு விடுத்து கடிதம் எழுத,
கூட்டத்தில் பேசிய ஜெயபிரகாஷ் நாராயணன்,
"ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எளிது, நிரூபிப்பது கடினம். குற்றச்சாட்டு சொல்வதால் மட்டுமே அவ்வரசு ஊழல் அரசாகி விடாது. கருணாநிதி சட்டமன்றத்தில் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறார். வேறு என்ன செய்ய வேண்டும" என்று கேட்க
விரக்தியின் உச்சத்திற்கே சென்றார் MGR.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு இரவோடு இரவாக நெருக்கடி நிலைக்கு வழிவகுக்க, செல்லும் இடமெல்லாம் அதை எதிர்த்து கடுமையாக விமர்சித்து கலைஞருக்கு இந்திரா தூது அனுப்புகிறார்.
ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருங்கள். ஓராண்டு ஆட்சியின் காலத்தை நீட்டிக்கிறேன் என்று.
கலைஞர் அதை மறுக்க, கோவை நகரில் லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையில் நெருக்கடிநிலை நிலை எதிர்த்து 1975 டிசம்பரில் திமுக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(1972) MGR அளித்த அதே புகார் பட்டியலை திமுக மாநாடு முடிந்த அடுத்த தினமே, நாஞ்சில் மனோகரன் அனுப்புகிறார்.
1976ம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. இரவோடு இரவாக அனைத்து இரண்டாம் கட்ட தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

அமைதி அமைதி அமைதி காத்து வாருங்கள். அண்ணனை காண செல்வோம்" என்று அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.

ஜனவரி 31, 1991
ஆட்சி பொறுப்பேற்ற(27 ஜனவரி 1989) சரியாக இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.
ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி இழந்தாலும் எந்த கரையும் இன்றி குற்றமில்லை என்று நிரூபித்த கலைஞருக்கு, மதில்மேல் பூனை தான் ஆட்சியதிகாரம் என்பதற்கு இதுவொரு சான்று.
வி.பி.சிங் பிரதமராக்கி தேசிய அளவில் இடஒதுக்கீட்டீல் புரட்சி கண்ட கலைஞருக்கு, சந்திரசேகர் அரசு கொடுத்த பரிசு ஆட்சி கலைப்பு.
1989 மார்ச் மாதம் முதல் ஆட்சி கலைப்புக்கு கோரிக்கை வைத்த ஜெயாவுக்கு சரியான வாய்ப்பு சந்திரசேகர் காலத்தில் கிடைத்தது எனலாம்.
மத்திய சந்திரசேகர் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த ஜெயாவின் நெருக்கடியை அடுத்து, ஆட்சிக்கு எதிராக அறிக்கை கேட்கிறார்கள்.

அப்போதைய தமிழக ஆளுநர் வங்கத்து சிங்கம் என்று கலைஞரால் அன்போடு அழைக்கப்பட்ட "சுர்ஜித் சிங் பர்னாலா",
ஆட்சிக்கு எதிராக அறிக்கை தர மறுக்கவே,
சுதந்திர இந்திய வரலாற்றில், அரசியல் சட்டப்பிரிவு 356ல் Otherwise முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இதற்கு காரணம் அப்போதைய மத்திய அமைச்சர் சு.சாமி.

1990 நவம்பரில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று எழுதிய ஒரு கோப்பு,

அதை வைத்தே ஆட்சியை கலைக்க மத்திய அரசு பரிந்துரைக்க,
குடியரசு தலைவர் வெங்கட்ராமன் ஆட்சியை கலைத்தார்.

ஈழத்திற்காக ஆட்சியையே திமுக இழந்த வரலாறு இன்றைய சிறுபிள்ளை அரசியல்வாதிகள் அறிய வாய்ப்பில்லை



பின்னர் கலைஞர் மு. கருணாநிதி 1989-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி 3-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை 733 நாட்கள் முதல்வராக இருந்தார்.




ஜனவரி 21, 1989
வென்ற தொகுதிகள் திமுக 150 -27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-5- ஜனதா கட்சி 4 மொத்தம் 169
அதிமுக (ஜெ)-27 - இந்திய கம்யூனிஸ்ட் 3- மொத்தம் 30
அதிமுக (ஜா)-2 ஜி. கே. மூப்பனார்-26- அதிமுக 2- சுயேட்சைகள்-5- மொத்தம் 35

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று கலைஞர் மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி 3-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை 733 நாட்கள் முதல்வராக இருந்தார்.

சாத்தையா என்ற தமிழ் குடிமகன் –சபாநாயகர்
வி. பி. துரைசாமி-துணை சபாநாயகர் (8 பெப்ரவரி 1989 – 30 சனவரி 1991)

சுந்தர் லால் குரானா, ஐஏஎஸ் 1982-1988
பதவியேற்பு செய்தது பி. சி. அலெக்சாண்டர், ஐ.ஏ.எஸ் 1988-1990
அதற்கு பின் சுர்ஜீத் சிங் பர்னாலா 1990-1991



ஜனவரி 31, 1991

ஆட்சி பொறுப்பேற்ற(27 ஜனவரி 1989) சரியாக இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.
ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி இழந்தாலும் எந்த கரையும் இன்றி குற்றமில்லை என்று நிரூபித்த கலைஞருக்கு, மதில்மேல் பூனை தான் ஆட்சியதிகாரம் என்பதற்கு இதுவொரு சான்று.
வி.பி.சிங் பிரதமராக்கி தேசிய அளவில் இடஒதுக்கீட்டீல் புரட்சி கண்ட கலைஞருக்கு, சந்திரசேகர் அரசு கொடுத்த பரிசு ஆட்சி கலைப்பு.
1989 மார்ச் மாதம் முதல் ஆட்சி கலைப்புக்கு கோரிக்கை வைத்த ஜெயாவுக்கு சரியான வாய்ப்பு சந்திரசேகர் காலத்தில் கிடைத்தது எனலாம்.
மத்திய சந்திரசேகர் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த ஜெயாவின் நெருக்கடியை அடுத்து, ஆட்சிக்கு எதிராக அறிக்கை கேட்கிறார்கள்.
அப்போதைய தமிழக ஆளுநர் வங்கத்து சிங்கம் என்று கலைஞரால் அன்போடு அழைக்கப்பட்ட "சுர்ஜித் சிங் பர்னாலா",
ஆட்சிக்கு எதிராக அறிக்கை தர மறுக்கவே,
சுதந்திர இந்திய வரலாற்றில், அரசியல் சட்டப்பிரிவு 356ல் Otherwise முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இதற்கு காரணம் அப்போதைய மத்திய அமைச்சர் சு.சாமி.

1990 நவம்பரில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று எழுதிய ஒரு கோப்பு,
அதை வைத்தே ஆட்சியை கலைக்க மத்திய அரசு பரிந்துரைக்க,
குடியரசு தலைவர் வெங்கட்ராமன் ஆட்சியை கலைத்தார்.

ஈழத்திற்காக ஆட்சியையே திமுக இழந்த வரலாறு இன்றைய சிறுபிள்ளை அரசியல்வாதிகள் அறிய வாய்ப்பில்லை.

முதலாவது ஆட்சி கலைப்பு

முதலாவது ஆட்சி கலைப்பு 1976 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருக்கும் போது நடந்தேறியது. அப்போது மத்தியில் இந்திரா பிரதமராக இருந்தார். இக்கலைப்புக்கு முன் மொழிந்தவர் மறைந்த மக்கள் திலகம் எ.ம்.ஜி.ஆர் ஆகும். தி.மு.க வின் ஆட்சியில் உழல்/லஞ்சம் தலை விரித்தாடுகின்றது என்ற புகாரின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் 356 ஆம் பிரிவு உபயோகித்து தி.மு.க வின் ஆட்சி கலைக்கபட்டது.

தி.மு.க ஆட்சி 15/3/1971 தொடக்கம் 31/01/1976 வரை நிடித்தது. அதன் பின்னர் ஆட்சி கலைப்பால் ஜானாதிபதி ஆட்சி 30/06/1977 வரை நிடித்தது.

எம்.ஜி.ஆர் ரின் புகார் தவிந்து இன்னுமொருகாரணமும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உண்டு. அப்போது மத்தியில் இந்திரா பொது தேர்தலை தவிர்ப்பதற்காக 26/06/1975 இல் அவரசகால நிலையை பிரகனப்படுத்தி இருந்தார். தனக்கு ஒத்துழையாத தலைவர்களை நாட்டின் பாதுகாப்பை காராணம் காட்டி சிறைப்படுத்தினார், அத்துடன் சிலரின் ஆட்சியும் கலைக்கபட்டது.
தி.மு.க அவரசகால நிலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்த தலையிடியை போக்குவதற்கு இந்திரா எம்.ஜி.ஆர்r இன் ஒரு கருவியாக பயன் படுத்தினார். இதைப்போலவே இந்திராவால் குஜராத் ஆட்சியும் கலைக்கபட்டது.

இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு

இரண்டாம் ஆட்சி கவிழ்ப்பு 30/01/1991 இல் நடந்தேறியது. அப்போது சொல்லப்பட்ட காரணம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு தி.மு.க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமானக இருந்தவர்கள் ஈழ போராளிக்குழுக்கள் (குறிப்பாக புலிகள்) என்றும், அவர்களுக்கு தி.மு.க அரசு துனைபோவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலை ஆரம்பமாகின்றது. அதே சமயம் தி.மு.க வுக்கு ஈழ/புலி ஆதரவு சாயம் பூசப்பட்டது. ஆகவே ஜெயலலிதாவின் ஈழ/புலி எதிர்ப்பு நிலைக்கு முதன்மை காராணம் அரசியலே என்பது தெளிவாகின்றது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு அப்போது நடந்த மிக முக்கியமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் பத்மநாபாவின் படுகொலை. இது ஆனி மாதம் 1990 இல் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இவருடன் 13 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும், 2 பொதுமக்களும் கொலை செய்யபட்டனர்.
கவனிக்கவும், ஆட்சி கலைக்கபட்டது 30/01/91 இல் படுகொலை நடந்தது 19/06/1990 இல். ஏன் உடனே ஆட்சியை ஜானாதிபதி கலைக்கவில்லை?

காரணம் அ.தி.மு.க வுக்கு இசைவான அரசு அப்போது மத்தியில் இல்லை என்பாதால்.
மத்தியில் யார்?

89 இல் நடந்த பொது தேர்தலில் ராஜீவ் தலமையிலான கூட்டனி (அ.தி.மு.க உட்பட) தோல்வியை தழுவியது, ஜானதா தளம், பி.ஜே.பி கூட்டனி ஆட்சியை கைப்பற்றயது. வி.பி சிங் (ஜானதா தளம்) 02/12/1989 இல் பிரதம மந்திரியானர். ஆனால் அவரால் 10/11/1990 வரை தான் ஆட்சி செய்யமுடிந்தது. இவரின் காலத்தில் தான் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

ஜானதா தளத்தில் இருந்து பிரிந்து வந்து சமயாவாடி ஜானதா தளம் என்ற புதுக்கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சியான காங்கரசின் ஆதரவோடு சந்திர சேகர் வி.பி. சிங் க்கு பின் பிரதமனானர்.

இப்போது அ.தி.மு.க வுக்கு சார்பான ஆட்சி மத்தியில், ஆகவே பழைய ( 6 மாதத்துக்கு முன்) படுகொலையை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று தி.மு.க வின் ஆட்சி 30/01/1991 கலைக்கப்பட்டது.
சந்திர சேகர்க்கான ஆதரவை ராஜீவ் விலக்கிக்கொண்டதால் மறுபடியும் பொது தேர்தல் 91 இல் வந்தது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தான் அவர் 21/05/1991 இல் கொலை செய்யப்பட்டார்.

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜியார்) டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
ஜானகி தூது! கலைஞர் மறுப்பு!,

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆவேசத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். ஜானகியின் போராட்டத்துக்குத் மூன்று பேர் நன்னம்பிக்கை முனைகளாக இருந்தனர். ஜெயலலிதாவின் போராட்டத்துக்கு மூன்றுபேர் மூளையாகத் திகழ்ந்தனர். இவர்கள் உருட்டிய பகடையில் தமிழக அரசியல் பரமபதம் ரணகளமாகக் காட்சியளித்தது.

ஜா. அணியின் அதிரடி ஆட்டம்!

முதலமைச்சர் ஜானகி, “தனது ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு எதையும் தரத் தயார்... டெல்லியில் யார் காலிலும் விழத் தயார்.... ராமாவரம் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண மூட்டைகளை எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்கத் தயார்”என்று எதற்கும் தயார் நிலையில் இருந்தார். ஜா. அணியின் சலுகை பேரங்களுக்கு அடிபணியாத எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல்கள் விலையாக வைக்கப்பட்டன. அன்றைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனை கைக்குள் வைத்திருந்த ஜா. அணி, “தங்களை ஆதரிக்கவில்லை என்றால் ‘கட்சி மாறி’ என்று பட்டம் சூட்டி எம்.எல்.ஏ பதவியை பறித்துவிடுவோம்” என்று ஜெ. அணி எம்.எல்.ஏ-க்களை மிரட்டிப் பார்த்தது; அதற்கு மசியாதவர்களை வழிக்குக் கொண்டுவர, போலீஸ் பட்டாளம் ஏவிவிடப்பட்டது; அதற்கும் பணியாத எம்.எல்.ஏ-க்களின் மனைவிமார்களுக்கு பணக்கட்டுக்களைக் காட்டி மனமாற்றம் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரமாக மீண்டும் ஒரு சமரசத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், “நாவலர் நெடுஞ்செழியனுக்கு துணை முதலமைச்சர் பதவி; மற்றவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உறுதி" என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதேநேரத்தில், “ஜெயலலிதாவைவிட்டு நிரந்தரமாக ஒதுங்க வேண்டும்; ஜெயலலிதாவை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும்” என்று ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்த சமரசத் திட்டத்தை எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போனவர் ஜானகியின் சகோதரர் நாராயணன் என்ற மணி. நாவலரிடமும் பண்ரூட்டி ராமச்சந்திரனிடம் போய் இதைச் சொன்னபோது, அவர்கள் மரியாதையாகவே நாரயணனைத் துரத்தி அடித்தனர்.

அதுக்கப்புறம் அரங்கேறிய சம்பங்கள் !!!

ஜானகி தூது! கலைஞர் மறுப்பு!

கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் ஆரம்பத்தில் எந்தப் பக்கமும் சாயாமல், நடுநிலை மாயையில் சிக்கி இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் முன்னாள் சபாநாயகர் க.ராஜராம். இந்தியாவில் அப்போது இருந்த சமாஸ்தானத்து மன்னர்கள், திவான்கள், பகதூர்கள், டெல்லி அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று பெரிய இடங்களில் செல்வாக்குப் பெற்றவர். அவரும் ஜா. அணியா? ஜெ.அணியா? என்ற குழம்பிய நிலையில்தான் இருந்தார். அந்த நேரத்தில், ஹைதராபாத் சென்றிருந்த ராஜராமை, அங்கு முகாமிட்டு இருந்த ஜனாதிபதி வெங்கட்ராமன் சந்திக்க வரச் சொன்னார். சந்திக்கப்போன ராஜாராமிடம், “நான் ஜானகி ஆட்சியைத்தான் தமிழகத்தில் நிலை நிறுத்தப்போகிறேன்... அதனால் அவரைப் போய் ஆதரியுங்கள்” என்று அன்புக் கட்டளையிட்டார். ராஜாராமால் அதைத் தட்டமுடியவில்லை. எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரிடம் பேசி அமைச்சரவையில் ராஜாராமை சேர்க்க வைத்தவர் ஜனாதிபதி வெங்கட்ராமன்தான். அந்த நன்றிக்கடன் ராஜாராமை ஜா. அணியை ஆதரிக்க வைத்தது. ராஜாராம் லேசுப்பட்ட ஆள் இல்லை. அவர் இன்னொரு வீரப்பனுக்குச் சமம். விறுவிறுவென வேலைகளை முடுக்கிவிட்டார். உச்சபட்சமாக, அ.தி.மு.க ஆட்சி நீடிக்க, கலைஞர்யிடமே ஆதரவு கேட்டார் ராஜாராம். “கலைஞர்யையும் பேராசிரியர் அன்பழகனையும் சந்தித்து ஜானகியின் ஆட்சி நீடிக்க ஆதரவு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ராஜராம் சொல்வதைக் கேட்ட கலைஞர் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஆனால் கலைஞருக்குப் பக்கத்தில் இருந்த க.அன்பழகன், “எங்களால் இதற்கெல்லாம் ஆதரவு தர முடியாது” என்று பட்டென்று சொன்னார். ஆனாலும், ராஜாராம், ஆர்.எம்.வீரப்பனின் முயற்சியால், இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் நடிகர் சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும், தங்கபாலு ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் விலைபேசி வளைக்க முடிந்தது. இவற்றை எல்லாம் தாண்டி ஜானகி அணிக்கு, ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் குரானா, சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகியோர் வலுவான நன்னம்பிக்கை முனைகளாக இருந்து ஆதரவு கொடுத்தனர்.சிறைவைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்!

ஜா.அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஜெயலலிதா ஆடி கொஞ்சம் ஆடிப்போனது உண்மைதான். ஆனால், அசந்துவிடவில்லை. வாழ்வா? சாவா? போராட்டத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடு இறங்கி வேலை பார்த்தனர். அந்த அணியில் பலர் இருந்தாலும், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, நடராஜன் ஆகியோர் மூன்று மூளைகளாக இருந்து யோசித்துக் காய் நகர்த்தினார்கள். ஜானகி அணியின் அதிரடியில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விலைபோவதைத்தடுக்க அவர்களை வட இந்தியச் சுற்றுலாவுக்கு அனுப்பினார்கள். சட்டசபை தொடங்கும் நாள் நெருங்க ஆரம்பித்ததும், வட இந்தியாவில் இருந்த எம்.எல்.ஏ-க்களை மீண்டும் தமிழகத்துக்கே அழைத்து வந்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் அவர்களை ஒப்படைத்து பத்திரமாக வைக்கும் பொறுப்பைக் கொடுத்தனர்.
அவர், விருதுநகரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பஞ்சுமில் ஒன்றில் ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களை பதுக்கி வைத்தார். பஞ்சுமில்லில் தற்காலிக அறைகள் தயார் செய்யப்பட்டு அங்கு சகல வசதிகளும் செய்யப்பட்டன. எம்.எல்.ஏ.-க்கள் ஆனந்தன். பஞ்சவர்ணம், பாலகிருஷ்ணன், லட்சுமி,சேடப்பட்டி முத்தையா, தாராபுரம் பெரியசாமி, உப்பிலியாபுரம் சரோஜா, வெள்ளைக்கோயில் துரை ராமசாமி. பொள்ளாச்சி ரத்தினம், குத்தாலம் பாப்பா சுப்ரமணியன், உத்திரமேரூர் நரசிம்மபல்லவன், சேலம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் துரை அன்பரசன், திண்டுக்கல் பிரேம்குமார், சீர்காழி பாலகிருஷ்ணன், பள்ளிப்பட்டு நரசிம்மன், பெரியகுளம் சலீம், சங்ககிரி தனபால், குறிஞ்சிப்பாடி தங்கராஜ், குளத்தூர், நாச்சிமுத்து, கடையநல்லூர் பெருமாள், கோபிசெட்டிப்பாளையம் செங்கோடன், பவானிசாகர் சின்னச்சாமி, கண்டமங்கலம் சுப்பிரமணியம் ஆகியோர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தனர். ஆட்களை அடைத்து வைத்து காவல் காக்கும் வேலை மட்டும்தான் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு. ஆனால், அவருடைய செயல்பாடுகளுக்கான உத்தரவுகள் எல்லாம், போயஸ் கார்டனில் இருந்து வந்தன. பெரும்பாலும் அந்த உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனும், நடராஜனும்தான்.

இவ்வளவு தகிடுதத்தங்களுக்குப் பிறகு தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சட்டசபை கூடியது. அங்கு நடத்தப்பட வேண்டிய நாடகத்துக்கான ஒத்திகைகள் ஏற்கனவே பலமுறை பார்க்கப்பட்டதால், வெற்றிகரமாக அது சட்டமன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. ஜானகியின் நாற்காலி ஆட்டம் காணத் தொடங்கியது.

அதன்பின்னர் கலைஞர் மு. கருணாநிதி 1996-ம் ஆண்டு மே 13-ந்தேதி 4-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 2001-ம் ஆண்டு மே 13-ந்தேதி வரை 1826 நாட்கள் முதல்வராக இருந்தார்.





கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை








தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர் எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.

அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஒரே கட்சியின் சர்வாதிகார முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை கண்டிக்கும் வகையில் தேர்தலில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய திராவிட இனமொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளை திமுக ஆதரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற 15 வேட்பாளர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களில் பலர் திமுகவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா வேண்டாமா என்று திமுக மாநாட்டு வாசலிலேயே வாக்குப்பெட்டிகள் வைத்து தொண்டர்களின் கருத்து அறியப்பட்டது. பெரும்பான்மையோர் விருப்பத்தின் அடிப்படையில் திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது. அந்த முதல் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு நிறைய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 112 இடங்களில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. இவற்றில் சேவல் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் பலர் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து திமுக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தனது சின்னமாக உதயசூரியனை தேர்வு செய்தது. அப்போதிருந்து அந்த சின்னத்திற்கு இரண்டு முறை சோதனை வந்தது. ஆனால், அந்த சோதனைகளைக் கடந்து இன்றுவரை சுமார் 52 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை தக்கவைத்திருக்கிறது.

1962 தேர்தலில் 50 இடங்களில் வென்ற திமுக, 1967 தேர்தலில் பெரும்பான்மை பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து பெரும்பான்மை திமுக எம்எல்ஏக்களின் ஆதரவோடு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகு 1971 ஆம் ஆண்டு திமுக 184 இடங்களைக் கைப்பற்றி அரசு அமைத்தது. திமுகவின் இந்த வளர்ச்சி மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸுக்கும் தமிழகத்தில் இருந்த தமிழகத்தில் இருந்த திமுக எதிர்ப்பாளர்களுக்கும் பிடிக்கவில்லை. பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை அமல்படுத்துவதில் கலைஞர் காட்டிய வேகம் அவர்களுடைய வெறுப்பிற்கு ஒரு காரணமாக இருந்தது.

அவர்கள் திமுகவில் இருந்த எம்ஜிஆரை மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலமாக மிரட்டினர். அன்னிய செலாவணி விவகாரத்தில் சிக்கிய எம்ஜிஆர் திமுக மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அந்தப் பிளவைத் தொடர்ந்து திமுகவின் சின்னமான உதயசூரியனை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எம்ஜிஆருடன் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் மட்டுமே வெளியேறி இருந்தனர். அவர் ஒருவரைத் தவிர எம்எல்ஏக்கள் யாரும் வெளியேறவில்லை. எனவே, திமுகவின் சின்னமாக உதயசூரியன் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்திரா கொண்டுவந்த நெருக்கடிநிலையை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. எனவே, 1976 ஜனவரி மாதம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு மிசா சட்டத்தின்கீழ் விசாரணையே இல்லாமல் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். நெருக்கடி நிலைக் காலத்தில் மாநிலக் கட்சிகளுக்கு தடைவிதிக்கும் ஒரு நோக்கம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதிமுக என்ற பெயரை எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். ஆனால், திமுக தனது பெயரை மாற்ற மறுத்துவிட்டது. 1977 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில் திமுக 47 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் திமுக தனது வாக்குவங்கியை தக்கவைத்து மாநிலக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் சின்னத்தையும் நிரந்தரப்படுத்தியது.

1980 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக அதிமுகவை படுதோல்வி அடையச் செய்தது. அதைத்தொடர்ந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பிடிவாதத்தால் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு, எம்ஜியார் சாகும்வரை இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு ஆண்டு ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினாலும் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் என்று ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சி ஆளுநரின் அறிக்கையே இல்லாமல் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் வைத்து ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்தப் பழியை காங்கிரஸும் அதிமுகவும் திமுகமீது போட்டதால் தமிழகமே ரத்தக்களறியானது. திமுகவினரின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. ஆனாலும் தனது வாக்குவங்கியை தக்கவைத்து சின்னத்தை பாதுகாத்துக்கொண்டது.

அந்தத் தேர்தலைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு திமுக இன்னொரு பிளவைச் சந்தித்தது. கலைஞருக்கு எதிராக வைகோ தலைமையில் திமுகவின் 8 மாவட்டச் செயலாளர்களும், ஏராளமான பொதுக்குழு மற்றும் இளம் நிர்வாகிகளும் போர்க்கொடி உயர்த்தினர். தாங்கள்தான் உண்மையான திமுக என்று திமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டனர். திமுகவின் சின்னத்தை முடக்கவும் முயற்சி செய்தனர். ஆனால், திமுகவின் சட்டத்திட்டங்களும் விதிகளும் மிகத் தெளிவாக இருந்ததால் எதிர் அணியின் வேண்டுகோளை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. திமுகவும் அதன் சின்னமும் இரண்டாவது முறையாக தக்கவைக்கப்பட்டது. தங்கள் முயற்சி தோற்றதால் வைகோவும் அவருடைய ஆதரவாளர்களும் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். வைகோவுக்குப் பிறகு, திமுகவில் கட்சியைப் பிளக்கும் அளவுக்கு பெரிய சம்பவங்கள் நிகழவில்லை. எனவே, இன்றுவரை திமுகவின் சின்னமாக உதயசூரியனே நீடிக்கிறது.



2006-ம் ஆண்டு மே 13-ந்தேதி 5-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் கலைஞர் மு. கருணாநிதி. 2011-ம் ஆண்டு மே 15-ந்தேதி வரை சுமார் 1828 நாட்கள் முதல்வராக இருந்தார்.


2006 சட்டசபைத் தேர்தல் பிளாஷ்பேக்

2006 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்து அது ஆட்சியமைத்தது.

2006-ம் ஆண்டு மே 13-ந்தேதி 5-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 2011-ம் ஆண்டு மே 15-ந்தேதி வரை சுமார் 1828 நாட்கள் முதல்வராக கலைஞர் இருந்தார்.

ஆளுநர் : சுர்ஜீத் சிங் பர்னாலா(2004-2011)
சபாநாயகராக ஆவுடையப்பன்
துணை சபாநாயகராக வி.பி .துரைசாமி

அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்தது.
திமுக கூட்டணி:
2006 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்திருந்தன.
அதிமுக கூட்டணி:
அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
தனித்து 232 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக:
2005ல் ஆரம்பிக்கப்பட்ட விஜயகாந்த்தின் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இக்கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்தது. இருப்பினும் 2 வேட்பாளர்களுக்கு சின்னம் கிடைக்காததால் 232 தொகுதிகளில் மட்டும் அது போட்டியிட்டது.
திமுக கூட்டணி-கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்:
திமுக கூட்டணியில் திமுக 132 போட்டிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 48, பாமக 31, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13, இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளில் போட்டியிட்டன.
அதிமுக கூட்டணி-கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்:
அதிமுக கூட்டணியில் அதிமுக 188, மதிமுக 35, விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளில் போட்டியிட்டன.
திமுக கூட்டணி வென்ற இடங்கள்:
திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றது.
அதில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள்
திமுக - 96
காங்கிரஸ் - 34
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6
அதிமுக கூட்டணி வென்ற இடங்கள்:
அதிமுக கூட்டணி 69 இடங்களில் வென்றன.
அதிமுக - 61
மதிமுக - 6
விடுதலைச் சிறுத்தைகள் - 2
தேமுதிக - 1
சுயேச்சை - 1
கூட்டணிகள்-கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம்:
திமுக கூட்டணி - 44.8%

திமுக - 26.5% காங். - 8.4% பாமக - 5.7% சிபிஎம் - 2.7% சிபிஐ - 1.6% அதிமுக கூட்டணி - 39.9% அதிமுக - 32.6% மதிமுக - 6.0% விடுதலைச் சிறுத்தைகள் - 1.3% தேமுதிக - 8.4% பாஜக - 2.0%

தோல்வி எப்போது தோல்வியாகிறது என்றால், நாம் அந்த தோல்வியிலிருந்து எதுவும் கற்காதபோதுதான்' என்பார் குத்துச்சண்டை வீரர் ரெனன். ஜெயலலிதா கடந்த நாடாளுமன்றத் தோல்வியிலிருந்து அனைத்தையும் நன்கு கற்றிருந்தார். முக்கியமாக, 'இனி வலுவான கூட்டணி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது' என்பதை..! தன் கூட்டணி வாகனத்திலிருந்து பா.ஜ.க-வை இறக்கிவிட்டு... பிற கட்சிகளுக்காக இருக்கைகளை வைத்திருந்தார். ம.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஹாஸ்யங்கள் உலாவின. சரத்குமாரும் அ.தி.மு.க வாகனத்தில் ஏறுவார் என்று முணுமுணுக்கப்பட்டது.
அந்த சமயத்தில்தான் தி.மு.க மாநாடு திருச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டது. அது தி.மு.க மாநாடாக மட்டுமில்லாமல், கூட்டணிக் கட்சிகளின் மாநாடாக இருந்தது. மாநாடு துவக்க நாளன்று, 'தி.மு.க-வில் தான் கேட்ட இடங்கள் கிடைக்காததால், அ.தி.மு.க கூட்டணிக்கு வைகோ செல்வது உறுதியாகிவிட்டது' என ஊடகங்கள் எழுதின. ஆனால், இதை மூன்று தரப்பும் உறுதி செய்யாமல், அமைதி காத்தது.
'பிரிந்த வைகோ... சேர்ந்த சரத்குமார்... தனியன் விஜயகாந்த்'
அதுவரையிலும் அ.தி.மு.க-வுடன் திரைமறைவாக மேற்கொள்ளப்பட்ட கூட்டணி பேரங்கள், இதன்பின் வெளிப்படையாக நடைபெறத் தொடங்கியது. 19 மாதங்கள் ஜெயலலிதா தன்னை பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, அவருடன் இன்முகத்துடன் கைகுலுக்கினார் வைகோ.
இது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது, சரத்குமாரின் நிலைப்பாடு. தி.மு.க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சரத்குமார், “நான் இறந்தால் என் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப்பட வேண்டும்” என்று மிக உருக்கமாக உரையாற்றினார். கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் கண்கலங்கித்தான் போனார்கள். ஆனால், அடுத்த சில தினங்களில் சரத்குமார் எடுத்த முடிவு அதிரடியானது. ஆம், வைகோவாவது கூட்டணிதான் வைத்தார். சரத்குமார் கட்சியிலேயே இணைந்துவிட்டார். ஜெயலலிதாவை ராதிகாவுடன் சென்று சந்தித்து அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையைப் பெற்றார். ராதிகாவுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இப்போது அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க என இரண்டு பிரதான கட்சிகள். மேலும் பிரசாரம் செய்ய நட்சத்திரங்கள். தி.மு.க கூட்டணி அளவுக்கு வலுவான கூட்டணி இல்லாவிட்டாலும் மோசம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூட்டணி இருந்தது. எம்.ஜி.ஆர் உண்டாக்கி வைத்திருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் உடன் இருக்கிறது.
ஹூம்... இந்தத் தேர்தலில் இன்னொரு கட்சியும் புதிதாக களத்தில் இறங்கியது. ஆம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க-வும் இப்போது களத்தில். “தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று. மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி” என்று சொல்லிவிட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டுவிட்டு, அவரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டார்.இப்படியாகத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது. இவர்கள் கொப்பளித்த வார்த்தைகளின் உஷ்ணத்தில் களம் சூடாகியது.
கலைஞரின் அதிரடி முடிவுகள் அவர்களின் கணக்கை காலி செய்தது
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த எந்த மோசமான பிம்பமும் இப்போது ஜெயலலிதாவுக்கு இல்லை. 'கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும் ஏறத்தாழ ஒரே பலத்துடன்தான் தேர்தலை சந்திக்கப்போகிறோம்' என்பதை உணரத் தொடங்கினார் கலைஞர் ஆக, ஜெயலலிதாவை வீழ்த்த கூட்டணி மட்டும் போதாது. வேறு அஸ்திரங்களும் தேவை என்று எண்ணிய கலைஞர்வடிவமைத்ததுதான்... ‘இலவச அஸ்திரம்’! ஆம், 'இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவசத் தொலைக்காட்சி, இரண்டு ஏக்கர் நிலம், கேஸ் இணைப்பு' என அவரின் தேர்தல் அறிக்கை இலவசங்களால் நிரம்பி வழிந்தது. அ.தி.மு.க கூட்டணி கொஞ்சம் ஆடித்தான் போனது. சென்ற சட்டமன்றத் தேர்தலில், 'தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. என் இருப்பை இல்லாமல் செய்யப்பார்க்கிறார் கலைஞர்.. பொய் வழக்கு போடுகிறார்' என்று தன்னைச் சுற்றியே பிரசாரத்தை வடிவமைத்த ஜெயலலிதா இந்தத் தேர்தலில் அப்படிச் சொல்லமுடியாது. எனவே, அவரும் சில இலவசங்களை வழங்குவதாகச் சொன்னார்.
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால், இலவசக் கணினி வழங்கப்படும் என்றார். தொலைக்காட்சிக்கு முன்னால் கணிப்பொறி எடுபடவில்லை. அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் அளவுக்கு படுமோசமான தோல்வி அல்ல... கவுரவமான தோல்விதான்! அ.தி.மு.க 61 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணி பலம்... இலவசம் என எல்லாம் இருந்தும் தி.மு.க-வால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிகள் துணையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தே.மு.தி.க 8 சதவிகித வாக்குகளைப் பெற்று இருந்தது. அந்த கட்சியிலிருந்து விஜயகாந்த் மட்டும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபை தேர்தல் 1957- திமுக வென்ற தொகுதிகள்  15

திமுகவுக்கு மட்டுமல்ல; கருணாநிதிக்கும் இதுதான் முதல் தேர்தல். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிதன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தது திமுக. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராசர் தமிழக முதல்வரானார்.    

சட்டசபை தேர்தல் 1962- திமுக வென்ற தொகுதிகள்  50 –எதிர்கட்சி

சட்டசபை தேர்தல் 1967 ( சி.என்.அண்ணாதுரை(1967-1969),

2 கலைஞர் மு.கருணாநிதி (1969-1971)- திமுக 179 .

சட்டசபை தேர்தல் 1971 -கலைஞர் மு.கருணாநிதி (1971-1976)- திமுக 205 .

சட்டசபை தேர்தல் 1989-1991 கலைஞர் மு.கருணாநிதி -திமுக வென்ற தொகுதிகள்150 .

சட்டசபை தேர்தல் 1996-2001. கலைஞர் மு.கருணாநிதி (
1996-201)- திமுக வென்ற தொகுதிகள் 173 .

சட்டசபை தேர்தல் 2006-2011. கலைஞர் மு.கருணாநிதி -திமுக வென்ற தொகுதிகள் 96 .

தி.மு.க ஆட்சி! 2021



Comments

Popular posts from this blog

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி