Posts

Showing posts from May, 2021

யார் இந்த காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் -வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

Image
  இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திரு.காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் அவர்கள்.   யார் இந்த முத்துராமலிங்கம்.. கமுதி ஒன்றியத்தின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருமுறை ஒன்றிய தலைவராக இருந்தபசும்பொன் தேவரின் உறவினரான காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களின் தலைமகன் தான் திரு.முத்துராமலிங்கம் அவர்கள்.   திரு.காதர்பாட்சா வெள்ளைச்சாமி 1971 சட்டசபைத் தேர்தலில் , சுயேச்சையாக வெற்றி பெற்று , தி.மு.க. , வுக்கு ஆதரவு அளித்தார். இதன்மூலம் , திமுக தலைவர் கலைஞருக்கு நெருங்கிய நண்பரானார். 1989 ல் , தி.மு.க. , சார்பில் , முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. , ஆனார்.   அதன்பின் , கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களுக்கு மூன்று மகள்கள் , இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முத்துராமலிங்கம் , மேலராமநதி ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது , இவரை எதிர்த்து , அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல் ,  மனு தாக்கல் செய்தார். ஊர் முக்கியஸ்தர்கள் , இமானுவேலை ச