யார் இந்த காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் -வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

 

இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
திரு.காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் அவர்கள்.

 

யார் இந்த முத்துராமலிங்கம்..
கமுதி ஒன்றியத்தின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருமுறை ஒன்றிய தலைவராக இருந்தபசும்பொன் தேவரின் உறவினரான காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களின் தலைமகன் தான் திரு.முத்துராமலிங்கம் அவர்கள்.

 

திரு.காதர்பாட்சா வெள்ளைச்சாமி 1971 சட்டசபைத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றி பெற்று, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். இதன்மூலம், திமுக தலைவர் கலைஞருக்கு நெருங்கிய நண்பரானார். 1989ல், தி.மு.க., சார்பில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., ஆனார். 

அதன்பின், கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் முத்துராமலிங்கம்,
மேலராமநதி ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது, இவரை எதிர்த்து, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல்

மனு தாக்கல் செய்தார். ஊர் முக்கியஸ்தர்கள், இமானுவேலை சமாதானப்படுத்தி, விலக வைத்தனர். இதனால், முத்துராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்பின், முத்துராமலிங்கத்திற்கு ஊர் பிரச்னைகள் தொடர்பாக, பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. 

தந்தையின் சொல்படி, முத்துராமலிங்கம் செயல்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட, முன்விரோதத்தில், வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் தனசீலன் மூலமாக காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி அவர்கள் அவரது வீட்டில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். கமுதியில்

தன் வீட்டில் காலை, 9.30 மணிக்கு, சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சார்ந்த தனசீலன்,35, என்பவர் காதர்பாட்சா வீட்டிற்கு வந்தார். மறைத்து வைத்திருந்த அரிவாளால், திடீரென காதர்பாட்சாவின் தலையின் பின்புறம், கை, மார்பில் சரமாரியாக வெட்டினார். இதில்

காதர்பாட்சா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை காப்பாற்ற வந்த, மனைவி ருக்மணியின் கையிலும், தனசீலன் வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடி வந்த, காதர்பாட்சாவின் உறவினருக்கும், தப்பியோட முயன்ற தனசீலனுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரும்புக்கம்பியால் 

தாக்கப்பட்டு, தனசீலன் இறந்தார்.
20
ஆண்டுகளாக, மேலராமநதி ஊராட்சித் தலைவராக இருந்த முத்துராமலிங்கம் அவர்கள் தந்தை மறைந்த பின் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளராக தளபதியார் உத்தரவுபடி அன்றைய மாவட்ட செயலாளராக இருந்த சுப.தங்கவேலன் அவர்களால் நியமிக்கப்பட்டார். 

முத்துராமலிங்கம் அவர்களின் தந்தை மறைவுக்கு தலைவர் கலைஞர் வழங்கிய அறிக்கை.
தென்பாண்டி சீமையில் தி.மு.க.வை வளர்த்த மூத்த முன்னோடிகளில் ஒருவரும் - "மிசா'' வில் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவரும் - முதுகுளத்தூர் தொகுதி 

சட்டப் பேரவை உறுப்பினராக 1971 முதல் 1976 வரையிலும், பின்னர் 1989 முதல் 1991 வரையிலுமாக இரண்டு முறை மிகச்சிறப்பாகப் பணியாற்றியவரும் - கடலாடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருந்தவரும் - கழகத்தின் சொத்துப்பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருந்தவரும் - கமுதி ஊராட்சி ஒன்றியப் 

பெருந்தலைவராக மூன்று முறை பணியாற்றியவருமான காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி படுகொலைக்காளாகி மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன்.
முதுகுளத்தூர் பகுதியில் முதியோர், இளையோர் என்று பாராமல் அனைவரிடமும் அன்பு காட்டி, அமைதி வழியில் அயராமல் 

மக்கள் பணியாற்றியவர் காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்காமல் செல்லவேமாட்டார்.
நீண்ட நெடிய திடகாத்திரமான உருவம் அவருடையது. எல்லோரிடமும் மிகவும் பொறுமையாகப் பேசுவார். என்ன பகை காரணமாக அவரைக் கொன்றார்களோ தெரியவில்லை. 

தி.மு.க. இடுகின்ற கட்டளைகளையேற்று, தி.மு.க.வின் சார்பில் நடத்தப்பட்ட அத்தனை அறப்போராட்டங்களிலும் கலந்து கொள்வார். மதுரை, முகவை மாவட்டங்களில் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் என்னுடன் அந்தச் சுற்றுப் பயணங்களில் அவரும் கலந்து கொள்வார். அவரை இழந்து 

வாடும் அந்தப் பகுதி தி.மு.க.வினருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய மறைவினை மனதிலே கொண்டு எந்தவிதமான ஆத்திரத்திற்கும், கோபத்திற்கும் கழகத் தோழர்கள் ஆளாகாமல், அமைதி காக்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை விட்டார்..
தி.மு.க. தலைமைக்கழகம் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் தி.மு.க. உறுப்பினர் காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி மறைவினையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு தி.மு.க. அமைப்புகள் 

அனைத்தும் தி.மு.க. கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது.
இராமநாதபுரம் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம் அவர்கள் அரசியல் பாரம்பர்யம்மிக்கவர் 

என்பதில் சந்தேகமில்லை.
இராமநாதபுர மாவட்ட திமுகவில் பல தலைவர்கள் இருந்தாலும் நான்கு
பிரபல்யமான திமுக குடும்பங்கள் உள்ளன.
1,
திரு.தங்கப்பா அவர்கள் குடும்பம்
2,
திரு.சத்தியேந்திரன் அவர்கள் குடும்பம்
3,
திரு.சு.ப.தங்கவேலன் குடும்பம்
4,
திரு. காதர் பாட்சா வெள்ளைச்சாமி குடும்பம். 

திமுக என்ன குடும்ப அரசியலா என்று கேட்பார்கள்.அப்படித்தான் வழி வழியாக தமிழ்நாடு முழுவதும்.
வழி நடத்த ஒரு ஆளுமை உள்ள தலைவன் வேண்டுமே!


1,
திரு.தங்கப்பா அவர்கள் 1967ல் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து வென்றவர்.திரு.தங்கப்பா மறைவுக்கு பின் அவர் 

சகோதரர் ராமசாமி அவர்கள் அதிமுக வேட்பாளராக இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் 1977,80,84 தொடர்ச்சியாக வென்று அமைச்சராகவும் இருந்து கடைசி காலத்தில் திமுக உறுப்பினராக இருந்து மறைந்தார். தங்கப்பா அவர்களின் பேரன் தான்
தற்போது பிரிக்கப்பட்ட பகுதியின் நகர்  செயலாளராக இருக்கும் பிரவீன் தங்கம்.
2,1986
வரை இராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்த திரு.சத்தியேந்திரன் அவர்கள் 1971 ல்
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும்,1980 ல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.1986 ல் அவரது அகால மரணத்துக்குப் பின் அவர் 

தம்பி எம்.எஸ்.கே.ராஜேந்திரன் அவர்கள் 1989ல் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரானார்.அவரும் அகாலமரமடைந்ததை அடுத்து அவர் மனைவி பவானி ராஜேந்திரன் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வருகிறார்.
அவர் திருமங்கலம் எம்எல்ஏவாக இருந்த ரெத்தினசாமி தேவரின் மகளாவார்.2004ல் 

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
மாநில மகளிரணி துணைத்தலைவராக இருக்கிறார்.
தற்போது இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்து கடைசி கட்டத்தில் கிடைக்காத நிலையிலிருக்கிறார். 

3,1986 சத்தியேந்திரன் அவர்கள் மறைவுக்கு பின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளராகிறார் திரு.சுப.தங்கவேலன் அவர்கள்.
1996,2066
ல் கடலாடி சட்டமன்ற உறுப்பினர்.2011ல் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்.
2011-2016
ல் வீட்டு வசதி துறை அமைச்சர் ஆனார்.
இவர் மகன் சுப.த.சம்பத் அவர்கள் 

தளபதியாரோடு மாநில இளைஞரணி துணை செயலாளராக இருந்தவர்.சில காலம் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார்.
அதன்பின் சுப.த.திவாகர் மாவட்ட செயலாளர் ஆகிறார்.திவாகர் அவர்கள் 2016ல் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு 8000வாக்குகளில் கருணாசிடம் தோற்கிறார்.
2018
ஜூலை சுப.த.திவாகர் மாற்றப்பட்டு 

திரு.முத்து ராமலிங்கம் அவர்கள் மாவட்ட பொறுப்பாளராகிறார்.
அவர் பொறுப்புக்கு வந்து இன்று 13-3-2021வரை நடந்ததை பற்றி எழுதினால் அது ஒரு பெரிய நீண்ட வரலாறு ஆகிவிடும்.
சுருக்கமாக,
முத்துராமலிங்கம் பொறுப்புக்கு வந்து நடந்த இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் 

கூட்டணியில் நின்ற நவாஸ்கனி வெற்றி பெற்றார்.பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.
2019
ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
திமுக மாவட்ட கவுன்சிலையும்,11 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலில் 7கவுன்சிலை திமுக வென்றது.4 ல் அதிமுக வென்றது.
தற்போது தலைவரை முதல்வராக்க 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
நான்கு தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.
அதற்கு மாவட்ட செயலாளராகவும்,
இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராகவும் உள்ள திரு.முத்துராமலிங்கம் அவர்கள்.
தன்னையும்,தன் ஆதரவாளர்களையும் பழிவாங்குகிறார் முத்துராமலிங்கம் என்ற அதிருப்தியில் இருக்கும் பெரியவர் 

திரு.சுப.தங்கவேலு,சுப.த.சம்பத்,
திரு.சுப.த.திவாகர் ஆகியோரையும்,
தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை, மக்கள் செல்வாக்கு இருந்தும் தனக்கு வேட்பாளராக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மனவருத்தத்தில் இருக்கும் பவானி ராஜேந்திரன் அவர்களையும் நேரில் சென்று பேசவேண்டும்.கருத்தொற்றுமைக்கு 

வரவேண்டும்.
அதே போல் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருக்கும் முன்னாள் கமுதி ஒன்றிய செயலாளர் செந்தூர பாண்டியன்,நயினார் கோவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலாயுதம்,கடலாடி ஒன்றிய முன்னாள் செயலாளர் ராஜசேகர், திருவாடானை ஒன்றிய முன்னாள் செயலாளர் மதிவாணன்
முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ திரு.முருகவேல்,திரு.பெருநாளி போஸ் ஆகியோரையும் அழைத்து பேசவேண்டும்.
உழைப்புக்கேற்ற பதவி, உரிய மரியாதை கிடைத்தால் மனமாச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை.
மாவட்ட பொறுப்பாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் திறந்த மனதுடன் களம் இறங்கவேண்டும்.இது என்னை போன்ற திமுக தொண்டர்களின் வேண்டுகோள். 

 

என்னைக் கூட சில நண்பர்கள் பல மாவட்டத்தை பற்றி எழுதுகிறீர்கள்.இராமநாதபுரம் மாவட்டத்தை பற்றி ஏன் எழுதுவதில்லை என கேட்பர். என்னைப்பொறுத்தவரை நான் தளபதியாரை தலைவராகவும் உதயசூரியன் தான் என் சின்னம் என்று நினைப்பவன். எல்லோருடன் பேசுபவன்.மாவட்ட பிரச்சனைகளை 

மாவட்ட பொறுப்பாளரிடம் பேசி பலவற்றை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்.










எங்களது இந்த கோரிக்கையையும் நிறைவேற்றி ஒன்றுபட்ட இராமநாதபுர திமுகவை உருவாக்க வாழ்த்துக்கள்..
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை. 

 

கமுதியில் தி.மு.க., "மாஜி' எம்.எல்.ஏ., வெட்டிக்கொலை: கொலையாளியும் கொல்லப்பட்டதால் பதற்றம்


கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தி.மு.க., முன்னாள் எம்.எம்.ஏ., காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, அவரது வீட்டில் நேற்று கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற, தனசீலன் என்பவரும், அங்கேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரட்டைக் கொலையால், கமுதியில் பதற்றம் நிலவுகிறது. கமுதி அருகே, மேலராமநதியைச் சார்ந்தவர் காதர்பாட்சா,87. இவர், கமுதியில், தன் வீட்டில் நேற்று காலை, 9.30 மணிக்கு, சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சார்ந்த தனசீலன்,35, என்பவர் காதர்பாட்சா வீட்டிற்கு வந்தார். மறைத்து வைத்திருந்த அரிவாளால், திடீரென காதர்பாட்சாவின் தலையின் பின்புறம், கை, மார்பில் சரமாரியாக வெட்டினார். இதில், காதர்பாட்சா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை காப்பாற்ற வந்த, மனைவி ருக்மணியின் கையிலும், தனசீலன் வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடி வந்த, காதர்பாட்சாவின் உறவினருக்கும், தப்பியோட முயன்ற தனசீலனுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு, தனசீலன் இறந்தார். காயமடைந்த ருக்மணி, மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதர்பாட்சாவின் உடல், கமுதி அரசு மருத்துவமனையிலும், ஊர் பாதுகாப்புக் கருதி, தனசீலன் உடல், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன. கொலை சம்பவம் குறித்து, கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். இரட்டைக் கொலை சம்பவம் காரணமாக, கமுதியில் பதற்றம் நிலவுகிறது; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; கடைகள் அடைக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பசும்பொன் தேவரின் உறவினரான காதர்பாட்சா, கமுதி ஒன்றியத்தின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையும் ஒன்றிய தலைவரான அவர், 1971 சட்டசபைத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றி பெற்று, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். இதன்மூலம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பரானார். 1989ல், தி.மு.க., சார்பில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., ஆனார். அதன்பின், கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கொலை செய்யப்பட்ட காதர்பாட்சாவிற்கு, மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முத்துராமலிங்கம், 20 ஆண்டுகளாக, மேலராமநதி ஊராட்சித் தலைவராக உள்ளார்.

தேர்தல் முன்விரோதமா? உள்ளாட்சித் தேர்தலில், காதர்பாட்சாவின் மகன் முத்துராமலிங்கம், மேலராமநதி ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது, இவரை எதிர்த்து, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல், மனு தாக்கல் செய்தார். ஊர் முக்கியஸ்தர்கள், இமானுவேலை சமாதானப்படுத்தி, விலக வைத்தனர். இதனால், முத்துராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்பின், முத்துராமலிங்கத்திற்கு ஊர் பிரச்னைகள் தொடர்பாக, பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தந்தையின் சொல்படி, முத்துராமலிங்கம் செயல்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட, முன்விரோதத்தில், காதர்பாட்சா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் தனசீலன் மூலமாக, கொலை சம்பவத்தை நடத்தியுள்ளதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது

https://www.dinamalar.com/news_detail.asp?id=538871

https://www.vikatan.com/news/crime/23607--2

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)






முகவை சட்டமன்ற தொகுதி
நினைவில் வாழும் முக்கிய
அரசியல்வாதிகள்
+++++++++++++++++++++++++
# இந்திய தேசிய காங்கிரஸ்
சண்முகராஜேஸ்வரசேதுபதி முன்னாள் அமைச்சர்
திரு.காசிநாத துரை ex MP
திரு. M S குப்புசாமி சேர்வை
முன்னாள் நகராட்சி தலைவர்
Dr E M அப்துல்லா
திரு B R நவசக்தி
திரு NR பாலகங்காதரன்
திரு பூபதி ex நகராட்சி தலைவர்
திரு ஜெகநாதபிள்ளை சேர்மன்
# தி.மு.க.
#######
திரு T . தங்கப்பன் MLA
திரு MSKசத்தியேந்திரன் ex.M P
திரு MSK ராஜேந்திரன் ex MLA
திரு M A காதர் ex M P
திரு சேக்சுல்தான் ex MC
# அ . இ. அ . தி . மு . க .
திரு T ராமசாமி; Ex அமைச்சர்
திரு SKG சேகர் Ex சேர்மன்
திரு S K வேலு கூரியூர்.
# தமிழ் மாநில காங்கிரஸ்
திரு RS நடராஜன் சேர்வை P C C இராமேஸ்வரம்.
# இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் மங்கள சாமி .
முகவை ராஜமாணிக்கம்
தியாகி ஆறுமுக நாடார்
கடுக்காய்வலசை
திரு . M S அப்துல் ரஹீம்
திரு TSO அப்துல் காதர்


Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி