Posts

Showing posts from August, 2020

ஒரு நடு இரவில் கணவன் மனைவி நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

Image
அப்போது மனைவியின் கைபேசியில் “பீப்“ சத்தம் கேட்டது. கணவன் எழுந்து சென்று மேசையின் மீதிருந்தக் கைபேசியை பார்த்து விட்டு, தன் மனைவியிடம் மிகவும் கோபமாக, “யார் இது? இந்த இரவு நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?” என்று சத்தம்போட்டார். மனைவியும் “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று மேசையிலிருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தாள். உடனே அவள் கோபத்துடன், அவரைவிடச் சத்தமாகக் கத்தினாள். “ஏய் அறிவு கெட்டவனே, முதலில் உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு... இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று வந்திருக்கு என்று கத்தினாள்.

அரசனுக்குப் பைத்தியம்...?

Image
  அரசனுக்குப் பைத்தியம்... ? ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் பயன்படுத்தினர். ஒருநாள் , ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை , அரண்மனைக்கு வெளியிலிருந்த அந்தப் பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை! அதன் பிறகு அந்த மந்திரவாதி , இனிமேல் , இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை , தண்ணீர் குடிக்க அவர்களால் அரண்மனைக்குள் போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரையேக் குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா , ராணி , இள

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா?

Image
நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது ? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய் , ‘ வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேற

கார்ப்பரேட் சாமியார்கள்

Image
  கிழிக்கப்படும் ஜக்கியின் முகமூடி ! - வெளிப்படும் ஜக்கியின் அயோக்கியத்தனங்கள் ! ( ஈஷா யோகா   மற்றும் ஈஷா அறக்கட்டளை என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘ கிட்டு ’ என்கிற ‘ கிருஷ்ண மூர்த்தி ’ என்கிற ' ஜெகதீஷ் '  என்கிற  ‘ ஜாவா வாசுதேவன் ’ என்கிற “ ஜக்கி வாசுதேவ் ” செய்துவரும் மோசடிகளையும் , அயோக்கியத்தனங்களையும் உலகிற்கு வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டும் பொருட்டு தங்கள் உயிரை பணயம் வைத்து ஆதாரங்கள் திரட்டிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி . மேலும் ஆதாரங்களை திரட்டி உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய   பதிவர் சவுக்கு   அவர்களுக்கு நன்றி . ஆதாரங்களை திரட்ட பக்கபலமாக இருந்த   புதிய தலைமுறை   ஊடகத்திற்கும் , உள்ளூர்வாசிகளுக்கும் ,  தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக சொல்லிய ,  ஜக்கியின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட தாணிக்கண்டி பழங்குடியின மக்களுக்கும் ,   அரசுத்துறை   அதிகாரிகளுக்கும் , அரசியல் நண்பர்களுக்கும்   நாஞ்சில் தமிழனின் நெஞ்சார்ந்த   நன்றிகள் . )    மனித இனம் தோன்றியதிலிருந்தே அவனுக்கான தத்துவத்தேட