39 ஆண்டுகளுக்குப் பின்னும் இருக்கிறது "தீண்டாமை" எனும் "வடு" - ("சிட்டிசன்"படத்தில் "அத்திபட்டி" )

39 ஆண்டுகளுக்குப் பின்னும் இருக்கிறது தீண்டாமை
சமூக நலன் அக்கரையுள்ள மான்புடையீர் ! இதில் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கில் உள்ள வடுக்களை
நீக்குங்கள் ! –
**(1991இன் கணக்கெடுப்பின்படி மதம் மாறிய 80% பேர் மீண்டும் இந்து மதத்திற்கே
திரும்பினர்)***
"சிட்டிசன்"படத்தில் "அத்திபட்டி" எனும் கிராமம் அழிந்த வரலாறு போல் இன்றும் encyclopedia வில் பொய் தகவல் கண்டேன் .
இது ஒரு கிராமமே மீனாட்சிபுரம் –ரஹ்மத் நகராக மாறிய கதை !
39 ஆண்டுகளுக்கு முன் ஐய்யங்கார்’ஸ்
ஒரு கிராமத்தில் ரத கஜ துரக பதாதிகளுடன்
கனல் கக்கும் கோபத்தில் அந்தக் கிராமத்திலுள்ள ஒரு தாழ்த்தப் பட்டோரை அழைத்து
மூன்று கேள்வி கேட்டார், கிடைத்த பதிலால்
மனமுடைந்து டெல்லிக்கு திரும்பினார்.
கேள்வி :
நீங்கள் ஏன்?
இஸ்லாம் மதத்திற்கு மாறுனீர்கள் அதிலொருவர்
பதில் கொடுத்தார் .
நான் ஒரு
வங்கியில் பணியாற்றும் சாதாரண ஊழியன் -28.000
ரூபாய் சம்பளத்துடன் ஆனால் எனக்கு பணி செய்யும் போது
என்னை சூழ்ந்துள்ளவர்கள் அனுகுமுறையால் நொடிக்கொருமுறை செத்து செத்து போகிறேன் .
1.
நான் உங்ககளை கட்டி ஆரத் தழுவனும் ?
2.
என்னுடைய வீட்டிலமர்ந்து என் அன்னை சமைத்து தரும்
உணவை நாம் நீங்கள் சாப்பிடனும்?
3.
என்னுடைய சந்ததியில் யாராவது ஒருவருக்கு உங்கள்
குடும்பத்திலிருந்து பெண் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் ?
வந்தவர் பதில் சொல்லமுடியாமல் திகைத்தார் .
தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினர் நல அமைப்பு இந்த
சமய மாற்றமானது கட்டாய சமயமாற்றம் இல்லை என கூறியது. ஆரிய
சமாஜம், விசுவ
இந்து பரிசத், பாரதிய
ஜனதா கட்சி போன்ற இந்து
அரசியல் அமைப்புகள் மற்றும் அடல்
பிகாரி வாஜ்பாய் போன்ற தலைவர்கள்
திருநெல்வேலி
மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஒரு சிற்றூர் ரஹ்மத் நகர். 1981 வரை அதன் பெயர் மீனாட்சிபுரம். ஆம், 37 ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவையே திடுக்கிட வைத்தது அந்த சம்பவம். மொத்த இந்தியாவின் கவனமும் அந்த
சிற்றூர் மேல் குவிந்திருந்தது. வாஜ்பாய், அத்வானி போன்ற பல
தலைவர்கள் மீனாட்சிபுரம் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி என்ன
நடந்தது மீனாட்சிபுரத்தில்?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிராமத்தில் 300 குடும்பங்களே
வசித்து வருகின்றனர். தீண்டாமை, மேல் வர்க்கத்தின் அடக்குமுறை காரணங்களால் மறைந்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 1981 ஆம் ஆண்டு
இக்கிராமத்தில் உள்ள 210 குடும்பத்தினர் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். ஒட்டு மொத்த மதமாற்றம் இந்தியாவில்
பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியானது. பாஜக தேசிய
தலைவராக இருந்த வாஜ்பாய் உள்ளிட்டோர்கள் நேரிடையாக இக்கிராமத்திற்கு வந்து மக்களை
சந்தித்து பேசினர்.
சாதி பெரிதா? மதம் பெரிதா? என்று
கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘சாதிதான் பெரிது.
நம் நாட்டில் மதம் மாற உரிமை உண்டு. ஆனால் சாதி மாற உரிமை இல்லை’ என்றார் கவிஞர்
வைரமுத்து. அந்த அளவிற்கு சாதி எனும் வேண்டாத குப்பையை மனித மூளை சுமந்து
திரிகிறது. உண்மையில் சாதி என்பது ஒரு மனநிலை. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை
ஏற்றுக் கொள்வதில் நமக்கு இருக்கும் உளவியல் சிக்கல்தான் என்னவென்பது புரியவில்லை.
இந்த நேரத்தில் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர் ஆன கதையை
வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அன்றைய மீனாட்சிபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வந்தன. மக்கள் தொகையால் கணக்கிட்டால் 1,300 பேர். அனைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துக்கள்.
ஒருவருக்கொருவர் உறவினர்கள். அனைவரும் சொந்த நிலம் வைத்திருந்தனர். விவசாயம்தான்
பிரதான தொழில். பொருளாதாரத்திலும்கூட நல்ல நிலைமையில்தான் இருந்தார்கள்.
தினக்கூலிகளாக வாழ்க்கை நடத்தியவர்கள் வெகு சிலர்தான். இப்படி பொருளாதாரத்திலும்
கல்வியிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என பட்டியலின இளைஞர்கள் நெஞ்சு
நிமிர்த்தி நடந்தாலும்,
அவர்களின் சாதியை காரணம் காட்டி அப்பகுதியைச் சேர்ந்த வேறு
சாதியினர், பட்டியலின மக்களை இழிவாகவே நடத்தினர். 60 வயது முதியவரை 10
வயது சிறுவன் ‘டேய்’ என ஒருமையில் கூப்பிடுவான்.
டீக்கடையில் தனி டம்ளர். வெள்ளை வேட்டி அணிந்தாலோ கிண்டல். பட்டப்படிப்பு
படித்தவரையும் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து அவமரியாதை செய்வது என பட்டியலின
மக்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அடிப்படை மனித உரிமைகள், சமூக நீதி
இவையெல்லாம் தங்களுக்கு மறுக்கப்படுவதோடு,
தலைமுறை தலைமுறையாக இழைக்கப்பட்டு வருகின்ற தீண்டாமை
கொடுமையிலிருந்து விடுதலை ஆவது எப்படி?
தாங்களும் தன்மானத்தோடு வாழ்வது எப்போது? என அடிக்கடி கூடி
யோசித்து விவாதித்த மீனாட்சிபுரம் மக்கள் ஒரு மனதுடன் உறுதியாக ஒரு முடிவை
எடுத்தனர்.
பட்டியலின மக்களாகிய தாங்களும் தங்களது வருங்கால
தலைமுறையினரும் மதிக்கப்பட, தன்மானத்தோடு தலை
நிமிர்ந்து நடைபோட, சாதி
கொடுமையிலிருந்து விடுபட எல்லோருக்கும் சமமானவர்களாக வாழ, இந்து
மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறோம் என்று அழுத்தம் திருத்தமாக முடிவெடுத்தனர்.
அதை அவர்கள் அறிவித்த நாள் பிப்ரவரி 19,
1981. இதன் தொடர்ச்சியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாம்
மதத்திற்கு மாறினர். சில நூறு பேர் மட்டும் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே
இருந்தனர்.
பட்டியலின மக்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும்
அனைத்து சலுகைகளும் இனி கிடைக்காது என்பது தெரியும். சலுகைகள் கிடைக்காவிட்டாலும்
பரவாயில்லை. தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் என்ற முத்திரை இல்லாமல் வாழ்ந்தாலே போதும்
என்று மதம் மாறியவர்கள் சொன்ன வார்த்தையில் இருந்து அவர்களை இத்தனை காலம் வாட்டி
வதைத்த சாதிக் கொடுமையின் வலியை உணர்ந்து கொள்ளலாம். மீனாட்சிபுரம் மக்கள் மதம்
மாறிய செய்தி எட்டு திசையிலும் எட்டி தெறிக்க,
நாடே அதிர்ந்தது. மத்திய – மாநில அரசுகள் திகைத்தன.
அதிகாரிகள் பட்டாளம் மீனாட்சிபுரத்தில் குவிந்தது. பல தரப்பினரும் இஸ்லாம்
மதத்திற்கு சென்றவர்கள் எல்லாம் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மதம் மாறிய மக்கள் தங்களது முடிவில் உறுதியாகவே
இருந்தனர்.
உண்மையில் மீனாட்சிபுரம் மக்கள் மீது வெகுகாலமாக
நிகழ்த்தப்பட்ட சாதிக் கொடுமையின் விளைவுதான் மதமாற்ற முடிவே அன்றி, அவர்கள் மதம்
மாறியது பிரச்சனை அல்ல. அன்று கவிஞர் வாலி,
‘ஆறுமுகம் என்றிருந்தோன் அப்துல்லாஹ் ஆனதுவும், அய்யனார்
என்றிருந்தோன் அந்தோணி ஆனதுவும், வேறு முகம் நாம் காட்டி,
வித்தியாசம் பல பேசி,
உடன்பிறந்தோரை எல்லாம் ஒதுக்கியதால் வந்த வினை’ என்று கவிதை
எழுதினார்.
அரசு ஆவணங்களிலும்,
இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு மீனாட்சிபுரம் என்பதுதான் பெயர். ஆனால்,
உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். இங்கு பெயரும் மதமும்தான்
வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
மரியாதை கிடைத்தது
இதுகுறித்து இந்த
கிராமத்தைச் சேர்ந்த மதம் மாறிய சுலைமான் கூறும்போது,
“மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத் தமாக மதம் மாறினேம். மதம்
மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது. முன்பு எங்களை மேல்வர்க்கத்தினர் வா,
போ என மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். இப்போது வாங்கள்,
போங்கள் என மரியாதையாக பேசுகிறார்கள். எங்களது வாழ்க்கைத் தரமும்
உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்கு சென்று நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.
அந்த மதமாற்றம்
சம்பவத்துக்கு பிறகு, தற்போது ஒரு கொலை மூலம் ராம்குமார் எங்கள் கிராமத்தை நாடு முழுவதும் பேச
வைத்துள்ளார். இது எங்களுக்கு வேதனையைத் தருகிறது. ஊருக்கு கெட்ட பெயரை
ஏற்படுத்தித் தந்துள்ளார்’’ என்றார்.
தலைகுனிவு
மதம் மாறிய நாகூர்
மீரான் என்பவர் கூறும்போது, ‘‘மேல் ஜாதியினரின் அடக்குமுறை காரணமாகவே
நாங்கள் மொத்தமாக மதம் மாறினோம். எனினும், மதம் மாறாத மற்ற உறவினர்களுடன் தொடர்ந்து அதே உறவு முறையோடு தான் பழகி
வருகிறோம். எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.
39 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் கிராமம் மீண்டும் வெளி உலகுக்கு
தெரியவந்துள்ளது. ஆனால், இந்த முறை வெட்கித் தலைகுனியும் நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.
இந்தச்
சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு
சமய மாற்றம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் ஆணையத்தை அமைத்தது. ஆணையம் அதன்
அறிக்கையில் மாநில அரசு மதமாற்றத்துக்கு எதிராக ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என
ஒரு ஆலோசனையை வழங்கியது, ஆனால் அரசு அதை
நிறுத்தி வைத்துள்ளது.[5] இந்து அமைப்புகள் இந்த சமய மாற்றத்தில்
வெளிநாட்டு நிதியின் மூலமாக நடந்தது என்று கூறினார். எனினும், மதம் மாறிய
தலித்துகள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல அமைப்பு இந்த
சமய மாற்றமானது கட்டாய சமயமாற்றம் இல்லை என கூறியது. ஆரிய சமாஜம், விசுவ இந்து
பரிசத், பாரதிய ஜனதா
கட்சி போன்ற இந்து அரசியல் அமைப்புகள் மற்றும் அடல் பிகாரி
வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போன்றோர் இந்தக்
கிராமத்துக்கு வந்து இசுலாம் மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் தாய்
மதத்துக்கு மாற வேண்டினர். பின்னர் 1991இன் கணக்கெடுப்பின்படி மதம் மாறிய 80% பேர் மீண்டும் இந்து மதத்திற்கே
திரும்பினர்.
பார்ப்பனர்களுக்குள்
தீண்டாமை இல்லையா ?
பார்ப்பனர்களுக்குள் ஐய்யர்,ஐய்யங்கார் அப்டின்னு
இரண்டு பெரிய குருப் இருக்கு.
அதுக்குள்ள போனா நிறைய
சப் குருப்ஸ் வரும்.
இதுல ஐய்யங்கார் உயர்ந்தவங்க.
எப்டின்னா பிரம்மாவோட தலை உச்சில வந்தவங்க.
இந்த ஐய்யர் நெத்தில இருந்து வந்தவங்க.
பட்டைய நேரா போட்டா ஐய்யங்கார் அந்த நடு கோடு
ஸ்டைட்டா உச்சி தலை வரைக்கும் போவும்.
பட்டைய படுக்க போட்டா ஐய்யிரு . 2d கிளாஸ்.
இவங்க சிவனை அவர் மகன்
முருகனை கும்புடுவாங்க.
ஐய்யங்கார்ஸ் முருகனை
கும்புட மாட்டாங்க பிகாஸ்
உசத்தியில்ல அதான். அதனால் தான் முருகனை கண்ட
இடத்துலே வச்சி கும்புடறாங்க மாதிரி
பாவ்லா பன்றானுங்க.இந்த 2d கிளாஸ் காரனுக்கு
வரட்டு ஜம்பம் அதனால்
ஐய்யங்கார்ஸ் மாதிரி வேசம் கட்ட ஆரம்பிச்சிட்டானுங்க.
ஆக டோட்டல் நூல் பார்ட்டீஸ்
டேமேஜிங் தி லார்ட் முருகா.
Arunachalam TC
Arunachalam பதிவில்..

Comments
Post a Comment