பனைமரத்தின் அருமை

பனை

புல்லினத்தின் திணை

நிலத்துக்கு அணை

இவ்பூவுலகில்

இறப்பே இல்லை 

என்பதன் பொருள்

கற்பக விருட்சம்

 தமிழ்நாட்டின் மரம்

 

ஆண் பனை

ஏற்றை 

பெண்ணை மரங்களில்

மட்டுமே குலை இருக்கும்.

ஏற்றை மரத்தை விடப்

பெண்ணையின் பயன் மிகுதி.

 

நீளமான

உருளையின் பாதி

நிலம் புணர்ந்தே

நிற்கும்  தவநிலை வேர்கள்  .

பனம்பூவின் புறவிதழ்

வளையம் தான் தோடு

சொல்லும் சோழக் கல்வெட்டு

 

அதை அனுபவி உன்

மூலக்கூறு எண்ணிக்கை

கூட்டி எழுப்பு விடும் நாதம் .

அதை தினமும் குடித்தாலும்

சிறிது வெளியில்  உன்

மனைவிநின்னைத் தேடும்

மோகம் –அகப் பையிலுளிருக்கு

சுகப்பிரசவம் இருவருக்கும்.

 

இளம் பனைகள் வடலி

அது என்றும் அழைக்கும் பாடகி

இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்கும்

இதன் வயது உன்னை மிஞ்சும்

அதுவும் குத்தவைக்கும் பதினைந்தில்

அதைக் மகரந்த பூ சுண்ணாம்பு

நீரை பொழிந்தால் உடனே கருவுறும்.

சுண்ணாம்பு வாடை அது மனிதனின்

ஆசைக்கு வெளியாகும் நுரைத்த

படிமத்தின் நீர்மம்

படிமமாக இருந்தால் மட்டுமே

பனை கேட்கும்

பத்து திங்களுக்குள் .

 

பனை முப்பத்திநான்கு வகை

ஆண் பனை

பெண் பனை,

 கூந்தப்பனை,

 தாளிப்பனை,

 குமுதிப்பனை,

சாற்றுப்பனை,

 ஈச்சம்பனை,

 ஈழப்பனை,

சீமைப்பனை,

ஆதம்பனை,

திப்பிலிப்பனை,

உடலற்பனை,

கிச்சிலிப்பனை,

குடைப்பனை,

 இளம்பனை,

கூறைப்பனை,

இடுக்குப்பனை,

தாதம்பனை,

காந்தம்பனை

 பாக்குப்பனை,

ஈரம்பனை,

 சீனப்பனை,

 குண்டுப்பனை,

அலாம்பனை,

கொண்டைப்பனை,

ஏரிலைப்பனை,

ஏசறுப்பனை,

காட்டுப்பனை,

கதலிப்பனை,

வலியப்பனை,

வாதப்பனை,

அலகுப்பனை,

நிலப்பனை,

சனம்பனை.

 

 

பனையேறும்  பருவம்

ஏப்ரல் முதல் ஆகத்து

இராமநாதபுரம், தூத்துக்குடி.

நெல்லை சுற்றுப்புறம்

 

ஆகத்து முதல் மார்ச்

தென்குமரி

ஏப்ரல் முதல் அக்டோபர்

சேலம் –தருமபுரி

இது ஒரு

பருவ காலத் தொழில்

ஆனால்

எவ்வளவு உயரமான

மரமானாலும் வருந்துகிறது

அனாதையாக

அரசும் -நாணம் கெடாமல்

பனையோலிக்கிறது

ஏன்?

 முதலாளித்துவத்துக்கு

அடிமையானதால் .

அதால்

வேலையிழந்து

இடம் பெயருவதால் .

இவர்களைனைவரும்

வறுமையின் காலச்சுவடுகள் .

 

***(அவன் மேலும் சொன்னான்

உங்கள் இதயங்ககளை

காயங்களால்

அலங்கரியுங்கள்

காயங்களால் தான்

நீங்கள்

பிரகாசிப்பீர்கள் .

 

 

காயம்படும் ஓலைதான்

சுவடியாகிறது

 

காயம்படும் கல்தான்

சிலையாகிறது.

 

காயம்படும் மூங்கில்தான்

கானம் பாடுகிறது .

 

நினைவுகள் என்பவை

உங்கள்

ஆறாத காயங்களிருந்து

வடியும் ரத்தம்தான் )***K90-93

 

பனங்கருக்கு

பனங்கருக்குகள்,
பனைமரமேறிகளின்
கூர் முனை

கல் நொங்கு

கழிவு என
வீசுகிறார்கள்
அது தான்
மண்ணிலிருந்து மீண்டும்
பனங்கிழங்காக
விருட்சம் பெறுகிறது .

உணவுப்பொருட்கள்
• நுங்கு
• பனம் பழம்
o பூரான்
o பனாட்டு - (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
o பாணிப்பனாட்டு
o பனங்காய்ப் பணியாரம்
• கள்ளு
o பனங்கள்ளு
o பனஞ்சாராயம்
o வினாகிரி
• பதநீர்
o பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
o சில்லுக் கருப்பட்டி
o பனங்கற்கண்டு
o பனஞ்சீனி (பனை வெல்லம்)
• பனங்கிழங்கு
o ஒடியல்
ஒடியல் புட்டு
ஒடியல் கூழ்
o புழுக்கொடியல்
• முதிர்ந்த ஓலை
o விலங்கு உணவு
• குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை

பனைப் பொருட்கள்

பனை ஓலைச் சுவடிகள்
பனை ஓலைத் தொப்பி
குருத்தோலை

பனையோலை
பெட்டி
நீற்றுப் பெட்டி
கடகம்
பனைப்பாய்
கூரை வேய்தல்
வேலியடைத்தல்
பனைப்பாய்
பாயின் பின்னல்
பனையோலைப் பெட்டி

விவசாயத்திற்கு
கிணற்றுப் பட்டை
எரு,துலா

அலங்காரமாக
பனம் மட்டை
வேலியடைத்தல்
நார்ப் பொருட்கள்
தட்டிகள் பின்னல்
கங்குமட்டை
தும்புப் பொருட்கள்
விறகு,மரம்
கட்டிடப்பொருட்கள்
தளபாடங்கள்
பனம் விதை
எரிபொருள்

தமிழகத்தில்தான்
பனை ஆராய்ச்சி மையம்
பனை பொருட்கள்
தயாரிப்பு நிறுவனம்
சென்னையில்
அமைக்கப்பட்டுள்ளன.

பனம்பழத்திலிருந்து
போர்க்காலங்களில்
வேதியியல் பொருட்களால்
துணிசோப்புக்கள்
பனம்பழங்களையே
பயன்படுத்தினர்.
பற்பசையையும் ப
னம்பழம் ருசிக்க
சுவையானது.

பனம்பழத்தை
நெருப்பில் சுட்டு
களிபோல் உண்ணும்
பழக்கமும் பண்பாட்டில்
உண்டு .

வாழையைப்
வாழையடி வாழையாகப்
பயன்படும் பனை
ஒரு அனாதை மரம்
அதை யாரும் கண்டு
கொள்வதில்லை .


பனையென்னும் உணவு கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்🌴
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு

மருத்துவப் பயன்கள்:


• பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.


• பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.


• வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.


• புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.


• நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்குருவிற்குத் தடவ குணமாகும்.


• பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.


• பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.


• பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.


• பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.


• கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.


• அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.


• பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.


• எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.


• வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.


• பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.


• தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.


• கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.


• இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
• இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.


• மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

முற்று .

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி