அண்ணாவின் “கம்பரசம்
ஜடாயு சமீபத்தில் கம்பர் பாடல்களைப் பற்றி
விளக்கினார். இன்னும் கற்பூர வாசனை தெரியவில்லை என்றாலும் வேறு எந்தக் கவிதையை படிக்கிறோமோ
இல்லையோ கம்பர் பாட்டையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறது.
அப்போது இந்தப் புத்தகம் தற்செயலாக கண்ணில் பட்டது.
ரொம்ப
சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் அண்ணாவுக்கு முலை, அல்குல் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை. அப்படி
ஏதாவது வந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடி
இருக்கிறார். கிடைத்தவைகளை வைத்துக் கொண்டு கம்பன் எழுதியது ராமாயணம் இல்லை
காமாயணம் என்று டிபிகல் திராவிட எழுத்துப் பாணியில் நீட்டி முழக்கி எழுதி
இருக்கிறார்.
ராமனுக்கு
கல்யாணம், அல்லது
பட்டாபிஷேகம் என்றால் பெண்களும் மது அருந்தி, மேலாடையைப் பணயம் வைத்து சூதாடி, காமத்தில் திளைக்கிறார்கள், பக்தி
இலக்கியத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா என்று அங்கலாய்க்கிறார். விக்டோரியன்
விழுமியங்கள்!
ஆனால்
அவரையும் குறை சொல்வதற்கில்லை. அப்போது பரவலாக இருந்த விழுமியங்கள் அவைதான்.
அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த திரு.வி.க., ராஜாஜி, கம்பன் அடிப்பொடி
சா. கணேசன், டி.கே.சி. போன்றவர்கள்
வேறு விதமாக நினைத்திருக்க வாய்ப்பில்லை.
இன்று
படிக்கும்போது இரண்டு இடங்கள்தான் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன. ஒன்று
இயல்வுறு
செயல்வி நாவாய் இரு கையும் எயினர் தூண்டத்
துயழ்வான துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவவ யல்குலொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்கயா உயிர்ப்பளித்ததம்மா!
ராமனை
மீண்டும் நாட்டுக்குக் கூட்டி வர பரதன் தலைமையில் கூட்டம் கூட்டமாக ஜனம் போகிறது.
எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். கங்கையை படகில் கடக்கிறார்கள்.
அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல்
தெரிந்ததாம், அதைப்
பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம்
பிறந்ததாம்! இந்த நேரத்திலும் அல்குல் சிந்தனைதானா, கம்பனுக்கு சான்ஸ் கிடைத்தால் இப்படித்தான், சீச்சீ
என்கிறார் அண்ணா.
அந்தக்
காலத்தில் இதற்கு கம்பனின் ரசிகர்கள் கொஞ்சம் சப்பைக்கட்டு கட்ட
முயற்சித்திருக்கிறார்கள். முன்புறம் இல்லை, கம்பர் சொன்னது பின்புறம் தெரிவதைத்தான்
என்றெல்லாம் “மழுப்பி” இருக்கிறார்கள். கம்பர் செக்ஸ் மேனியாக் என்று அண்ணாதுரை வாதிடுவதை
முன்புறமா பின்புறமா என்று மயிர் பிளப்பது எப்படி மாற்றும் என்று எனக்குப்
புரியவில்லை!
ஒரு ஜோக்
உண்டு. மனைவி கணவனிடம் நான் நேற்றைக்குப் படித்தேன், ஆண்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செக்ஸைப்
பற்றித்தான் யோசிப்பார்களாமே, இது உண்மையா என்பாளாம். கணவன் மிச்ச நேரம்
எல்லாம் எதைப் பற்றி யோசிப்பார்களாம் என்று கேட்பான். கம்பர் மனித இயல்பைத்தான்
சொல்லி இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால்
கம்பனின் சிந்தனை இந்தப் பாடலில் எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.
வாராழி கலசக்
கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தாங்கும் பாந்தழும் பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?
அனுமனுக்கு
சீதையின் அங்க அடையாளத்தைச் சொல்லும் ராமன் கொங்கையையும் அல்குலையும் எதற்கு
விவரிக்கிறான்? சரி கொங்கையையாவது
ஒத்துக் கொள்ளலாம், அல்குல்? அனுமன் என்ன
பார்க்கும் பெண்களின் ஆடையை விலக்கி அல்குலை வைத்தா அடையாளம் காணப் போகிறான்? என்ன நினைத்து
இதை கம்பர் எழுதி இருப்பார்?
https://siliconshelf.wordpress.com/tag/c-n-annadurai/

Comments
Post a Comment