நியதியின் தற்கொலைக்கு (இருவருக்கிடையே புரிதலின் முரண் )

 



கல்- வத்து


கடை- மக்கள்

சற்று முன் அழுதார்கள்.

கடமை முடிந்ததா?

கரவா வரம்

கரவாமல் வருமா?

இறைவா அதை தா .

வேண்டாம் -இந்த

தொன்னூறு கடந்த

பேரிளம்- தொழுதோம்

விலகினோம்

**நான் இப்போதும்

அனியாயமாகவும்

அகம்- பாவமாமாக

இருக்கும் பாவி.

இதயம் இன்னும்

கட்டுண்டு தான்

கிடக்கிறது.

படிப்பினை பெற

மாட்டோம்.

ஏன்?**  

(திருக்குர்-ஆன்  (27-14)-முரண்

 

***மனிதம்

மதுவின் போதையிலும் ,

தூக்கத்தின் கலகத்திலும்..

நிதானத்தை இழப்பதால் அப்பொழுது மட்டும்

நான் உண்மையானவனாக இருக்க முடிகிறது அது **(கவிஞர் காசி ஆனந்தன் )

 

 

போதுமே?

இதிலும்

கரந்தேன் ஒரு வரியை

கலந்தேன் அதால்

உணர்ந்தேன் வலியை.

ஆறுதல் தேவை

உதவி செய்யுங்கள்.

புனர்ந்து கொள்ளுங்கள்

அதை மறவாமல் என்றும்.

 

***நைவினை நணுகேல்****

 




விளக்கவுரை 

 

நான் அவளைக் கடந்து சென்றேன்

திரும்பிப் பார்த்தாள்

விரும்பித்தான் பார்த்தாளா

விரக்தியுடன் பார்த்தாளா தெரியவில்லை

அவள் எனது வசவுகளை சுமந்தவள்

வாய்க்குணவு தந்தவள்

அவளது கரங்களிலே நான் தவழ்ந்த காலம் பொற்காலமே

அவள் தலையை வருடிவிட்டு எண்ணை (என்னை)தேய்த்துவிடும் போது அந்த விரல்களினால்
என் உச்சந்தலை என்ன ஸ்பரிசம் அடடா

இன்று அவள் கைகளை பார்க்கிறேன்

பழுத்த மரத்தின் வேர்க்கால்களைப் போல் படர்ந்து தெளிவாகவே தெரிகிறது.

உழைத்த கருத்த கையும் மேனியும்

தோல்கள் சுறுங்கியபடி வானில் தோன்றும் மின்னலின் கோடுகளாய்

அவள் யாருமில்லை எனது தாய்தான்

தமக்கையின் வீட்டில் இருக்கிறாள்

மரு...மகள் மாமி இடையே அடிக்கடி புகச்சல் அடுப்பில் எரியும் கரிக்கட்டை
போல்.நானும் அணைத்துத்தான் பார்க்கிறேன். அணைந்து மீண்டும் பற்றிக் கொள்கிறது.

அவள் இறுதிச் சடங்கை நான் செய்வேனா அல்லது

எனது சடங்கை அவள் நடத்துவாளா

காலமிது காலம் கொரோனா காலம்

 

**************

குறிப்பு :- இது ஒரு கற்பனை பதிவு

யாருடைய வாழ்க்கை தொடர் அல்ல

 

கவிஞர் அப்துல் ஹக்கீம்

 








Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி