ஆத்திசூடி எளிய உரை



ஆத்திசூடி மூலமும் உரையும்

 

  1. அறஞ்செய விரும்பு.

 

(பதவுரை) அறம் - தருமத்தைசெய - செய்வதற்குவிரும்பு - நீ ஆசை கொள்ளு.

(பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு.

Top of Form

Bottom of Form

 

 

  2. ஆறுவது சினம்.

 

(பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவதுசினம்-கோபமாம்.

(பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம்.

Top of Form

Bottom of Form

 

 

  3. இயல்வது கரவேல்.

 

(பதவுரை) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளைகரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,

(பொழிப்புரை) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.

Top of Form

Bottom of Form

 

 

  4. ஈவது விலக்கேல்.

 

(பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதைவிலக்கேல்-தடுக்காதே.

(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.

Top of Form

Bottom of Form

 

 

  5. உடையது விளம்பேல்.

 

(பதவுரை) உடையது - (உனக்கு) உள்ள பொருளைவிளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.

(பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
   
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

Top of Form

Bottom of Form

 

 

  6. ஊக்கமது கைவிடேல்.

 

(பதவுரை) ஊக்கம் - (செய்யுந் தொழிலில்) மன எழுச்சியைகைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)

Top of Form

Bottom of Form

 

 

  7. எண்ணெழுத் திகழேல்.

 

(பதவுரை) எண் - கணித நூலையும்எழுத்து - இலக்கண நூலையும்இகழேல் - இகழ்ந்து தள்ளாதே.

(பொழிப்புரை) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)

Top of Form

Bottom of Form

 

 

  8. ஏற்ப திகழ்ச்சி.

 

(பதவுரை) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பதுஇகழ்ச்சி- பழிப்பாகும்.

(பொழிப்புரை) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.

Top of Form

Bottom of Form

 

 

  9. ஐய மிட்டுண்.

 

(பதவுரை) ஐயம் - பிச்சையைஇட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்துஉண் - நீ உண்ணு.

(பொழிப்புரை) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
   
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.

Top of Form

Bottom of Form

 

 

  10. ஒப்புர வொழுகு.

 

(பதவுரை) ஒப்புரவு-உலக நடையை அறிந்துஒழுகு- (அந்த வழியிலே) நட.

(பொழிப்புரை) உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

Top of Form

Bottom of Form

 

 

  11. ஓதுவ தொழியேல்

 

(பதவுரை) ஓதுவது - எப்பொழுதும் படிப்பதைஒழியேல் - விடாதே.

(பொழிப்புரை) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

Top of Form

Bottom of Form

 

 

  12. ஒளவியம் பேசேல்.

 

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளைபேசேல் - பேசாதே.

(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

  13. அஃகஞ் சுருக்கேல்.

 

(பதவுரை) அஃகம் - (நெல் முதலிய) தானியங்களைசுருக்கேல் - குறைத்து விற்காதே.

(பொழிப்புரை) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.

Top of Form

Bottom of Form

 

 

  14. கண்டொன்று சொல்லேல்.

 

(பதவுரை) கண்டு-(ஒன்றைக்) கண்டுஒன்று-வேறொன்றைசொல்லேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)

Top of Form

Bottom of Form

 

 

  15. ஙப்போல் வளை.

 

(பதவுரை) ஙப்போல் - ஙகரம்போல்வளை - உன் இனத்தைத் தழுவு.

(பொழிப்புரை) ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.

    [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]

Top of Form

Bottom of Form

 

 

  16. சனிநீ ராடு.

 

(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும்நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு

(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)

Top of Form

Bottom of Form

 

 

  17. ஞயம்பட வுரை.

 

(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாகஉரை - பேசு.

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]

Top of Form

Bottom of Form

 

 

  18. இடம்பட வீடெடேல்

 

(பதவுரை) இடம்பட - விசாலமாகவீடு - வீட்டைஎடேல் - கட்டாதே

(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

Top of Form

Bottom of Form

 

 

  19. இணக்கமறிந் திணங்கு

 

(பதவுரை) இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளைஅறிந்து - ஆராய்ந்தறிந்துஇணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்.

(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.

Top of Form

Bottom of Form

 

 

  20. தந்தைதாய்ப் பேண்

 

(பதவுரை) தந்தை-பிதாவையும்தாய்-மாதாவையும்பேண்-காப்பாற்று

(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

Top of Form

Bottom of Form

 

 

21. நன்றி மறவேல்.

 

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியைமறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
   
உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

Top of Form

Bottom of Form

 

 

22. பருவத்தே பயிர்செய்.

 

(பதவுரை) பருவத்தே - தக்க காலத்திலேபயிர்செய்-பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு. 
    
எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

Top of Form

Bottom of Form

 

 

23. மன்றுபறித் துண்ணேல்.

 

(பதவுரை) மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டுபறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்துஉண்ணேல் - உண்டு வாழாதே.

(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
    '
மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.

Top of Form

Bottom of Form

 

 

24. இயல்பலா தனசெயேல்.

 

(பதவுரை) இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களைசெயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

Top of Form

Bottom of Form

 

 

25. அரவ மாட்டேல்.

 

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளைஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

Top of Form

Bottom of Form

 

 

26. இலவம்பஞ்சிற் றுயில்.

 

(பதவுரை) இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலேதுயில் - உறங்கு.

(பொழிப்புரை) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.

Top of Form

Bottom of Form

 

 

27. வஞ்சகம் பேசேல்.

 

(பதவுரை) வஞ்சகம்-கபடச் சொற்களைபேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

28. அழகலா தனசெயேல்.

 

(பதவுரை) அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களைசெயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.

Top of Form

Bottom of Form

 

 

29. இளமையிற் கல்.

 

(பதவுரை) இளமையில் - இளமைப் பருவத்திலேகல் - கல்வியைக் கற்றுக்கொள்.

(பொழிப்புரை) இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.

Top of Form

Bottom of Form

 

 

30. அறனை மறவேல்.

 

(பதவுரை) அறனை-தருமத்தைமறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

Top of Form

Bottom of Form

 

 

31. அனந்த லாடேல்.

 

(பதவுரை) அனந்தல் - தூக்கத்தைஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.

(பொழிப்புரை) மிகுதியாகத் தூங்காதே.

Top of Form

Bottom of Form

 

 

32. கடிவது மற.

 

(பதவுரை) கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதைமற - மறந்துவிடு.

(பொழிப்புரை) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

33. காப்பது விரதம்.

 

(பதவுரை) காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதேவிரதம் - நோன்பாகும்.

(பொழிப்புரை) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
   
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.

Top of Form

Bottom of Form

 

 

34. கிழமைப் படவாழ்.

 

(பதவுரை) கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படிவாழ் - வாழு.

(பொழிப்புரை) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.

Top of Form

Bottom of Form

 

 

35. கீழ்மை யகற்று.

 

(பதவுரை) கீழ்மை - இழிவானவற்றைஅகற்று - நீக்கு.

(பொழிப்புரை) இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

Top of Form

Bottom of Form

 

 

36. குணமது கைவிடேல்.

 

(பதவுரை) குணமது - (மேலாகிய) குணத்தைகைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.

Top of Form

Bottom of Form

 

 

37. கூடிப் பிரியேல்.

 

(பதவுரை) கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டுபிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே.

(பொழிப்புரை) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.

Top of Form

Bottom of Form

 

 

38. கெடுப்ப தொழி.

 

(பதவுரை) கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதைஒழி - விட்டு விடு.

(பொழிப்புரை) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)

Top of Form

Bottom of Form

 

 

39. கேள்வி முயல்.

 

(பதவுரை) கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்குமுயல் - முயற்சி செய்.

(பொழிப்புரை) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.

Top of Form

Bottom of Form

 

 

40. கைவினை கரவேல்.

 

(பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலைகரவேல் - ஒளியாதே.

(பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
    (
ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

Top of Form

Bottom of Form

 

 

41. கொள்ளை விரும்பேல்

 

(பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்குவிரும்பேல்-ஆசைப்படாதே.

(பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.

Top of Form

Bottom of Form

 

 

42. கோதாட் டொழி.

 

(பதவுரை) கோது-குற்றம் பொருந்தியஆட்டு- விளையாட்டைஒழி-நீக்கு.

(பொழிப்புரை) குற்றமான விளையாட்டை விட்டுவிடு.

கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.

Top of Form

Bottom of Form

 

 

43. சக்கர நெறிநில்.

 

(பதவுரை) சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில் – அடங்கி யிரு.

(பொழிப்புரை) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

Top of Form

Bottom of Form

 

 

44. சான்றோ ரினத்திரு.

 

(பதவுரை) சான்றோர் – அறிவினால் நிறைந்தவர்களுடைய, இனத்து – கூட்டத்திலே, இரு – எந்நாளும் இரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

Top of Form

Bottom of Form

 

 

45. சித்திரம் பேசேல்.

 

(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளைபேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

46. சீர்மை மறவேல்.

 

(பதவுரை) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தைமறவேல்- மறந்துவிடாதே.

(பொழிப்புரை) புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

Top of Form

Bottom of Form

 

 

47. சுளிக்கச் சொல்லேல்.

 

(பதவுரை) சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்) பேசாதே.

(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

48. சூது விரும்பேல்.

 

(பதவுரை) சூது-சூதாடலைவிரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

Top of Form

Bottom of Form

 

 

49. செய்வன திருந்தச்செய்.

 

(பதவுரை) செய்வன-செய்யும் செயல்களைதிருந்த - செவ்வையாகசெய் - செய்.

(பொழிப்புரை) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

Top of Form

Bottom of Form

 

 

50. சேரிடமறிந்து சேர்.

 

(பதவுரை) சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தைஅறிந்து - தெரிந்துசேர் - அடை.

(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

Top of Form

Bottom of Form

 

 

51. சையெனத் திரியேல்.

 

(பதவுரை) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படிதிரியேல் - திரியாதே

(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த்
திரியாதே

Top of Form

Bottom of Form

 

 

52. சொற்சோர்வு படேல்.

 

(பதவுரை) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில்சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே

(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே

Top of Form

Bottom of Form

 

 

53. சோம்பித் திரியேல்.

 

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டுதிரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

Top of Form

Bottom of Form

 

 

54. தக்கோ னெனத்திரி.

 

(பதவுரை) தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படிதிரி - நடந்துகொள்.

(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

Top of Form

Bottom of Form

 

 

55. தானமது விரும்பு.

 

(பதவுரை) தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலைவிரும்பு - ஆசைப்படு.

(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

Top of Form

Bottom of Form

 

 

56. திருமாலுக் கடிமை செய்.

 

(பதவுரை) திருமாலுக்கு - விட்டுணுவுக்குஅடிமைசெய் - தொண்டுபண்ணு

(பொழிப்புரை) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

Top of Form

Bottom of Form

 

 

57. தீவினை யகற்று.

 

(பதவுரை) தீவினை-பாவச் செயல்களைஅகற்று-(செய்யாமல்) நீக்கு.

(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.

Top of Form

Bottom of Form

 

 

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

 

(பதவுரை) துன்பத்திற்கு - வருத்தத்திற்குஇடங்கொடேல் - (சிறிதாயினும்) இடங்கொடாதே.

(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது

Top of Form

Bottom of Form

 

 

59. தூக்கி வினைசெய்.

 

(பதவுரை) தூக்கி - (முடிக்கும் வழியை) ஆராய்ந்துவினை - ஒரு தொழிலைசெய் - (அதன் பின்பு) செய்.

(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

Top of Form

Bottom of Form

 

 

60. தெய்வ மிகழேல்.

 

(பதவுரை) தெய்வம் - கடவுளைஇகழேல் - பழிக்காதே.

(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து பேசாதே

Top of Form

Bottom of Form

 

 

61. தேசத்தோ டொத்துவாழ்

 

(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனேஒத்து - (பகையில்லாமல்) ஒத்துவாழ் - வாழு.

(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.

Top of Form

Bottom of Form

 

 

62. தையல்சொல் கேளேல்

 

(பதவுரை) தையல் - (உன்) மனைவியினுடையசொல்- சொல்லைகேளேல் - கேட்டு நடவாதே.

(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

Top of Form

Bottom of Form

 

 

63. தொன்மை மறவேல்

 

(பதவுரை) தொன்மை - பழைமையாகிய நட்பை,மறவேல் - மறந்துவிடாதே

(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே

Top of Form

Bottom of Form

 

 

64. தோற்பன தொடரேல்

 

(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலேதொடரேல்-சம்பந்தப்படாதே

(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.

Top of Form

Bottom of Form

 

 

65. நன்மை கடைப்பிடி்

 

(பதவுரை) நன்மை - புண்ணியத்தையேகடைப்பிடி-உறுதியாகப் பிடி

(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள்.

Top of Form

Bottom of Form

 

 

66. நாடொப் பனசெய்

 

(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை,செய் - செய்வாயாக.

(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

Top of Form

Bottom of Form

 

 

67. நிலையிற் பிரியேல்.

 

(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்றுபிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.

(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே

Top of Form

Bottom of Form

 

 

68. நீர்விளை யாடேல்.

 

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலேவிளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

Top of Form

Bottom of Form

 

 

69. நுண்மை நுகரேல்.

 

(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.

(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே

Top of Form

Bottom of Form

 

 

70. நூல்பல கல்.

 

(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும்கல் - கற்றுக்கொள்.

(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள்.

Top of Form

Bottom of Form

 

 

71. நெற்பயிர் விளை.

 

(பதவுரை) (நெற்பயிர் - நெல்லுப் பயிரைவிளை- (வேண்டிய முயற்சி செய்து) விளைவி.

(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல்.

Top of Form

Bottom of Form

 

 

72. நேர்பட வொழுகு.

 

(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப் படஒழுகு - நட.

(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட

Top of Form

Bottom of Form

 

 

73. நைவினை நணுகேல்.

 

(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்கவினை - தீவினைகளைநணுகேல் - (ஒருபோதும்) சாராதே.

(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.

Top of Form

Bottom of Form

 

 

74. நொய்ய வுரையேல்.

 

(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளைஉரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

75. நோய்க்கிடங் கொடேல்.

 

(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்குஇடங்கொடேல்-இடங்கொடாதே.

(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.

Top of Form

Bottom of Form

 

 

76. பழிப்பன பகரேல்.

 

(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களைபகரேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச்
சொற்களுமாம்.

Top of Form

Bottom of Form

 

 

77. பாம்பொடு பழகேல்.

 

(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனேபழகேல் -சகவாசஞ் செய்யாதே.

(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.

Top of Form

Bottom of Form

 

 

78. பிழைபடச் சொல்லேல்.

 

(பதவுரை) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.

(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

79. பீடு பெறநில்.

 

(பதவுரை) பீடு - பெருமையைபெற - பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..

(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு.

Top of Form

Bottom of Form

 

 

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

 

(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றிவாழ் - வாழு.

(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து வாழு.

Top of Form

Bottom of Form

 

 

81. பூமி திருத்தியுண்.

 

(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தைதிருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்துஉண் - உண்ணு.

(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.

Top of Form

Bottom of Form

 

 

82. பெரியாரைத் துணைக்கொள்.

 

(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக நாடிக்கொள்.

Top of Form

Bottom of Form

 

 

83. பேதைமை யகற்று.

 

(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தைஅகற்று - போக்கு.

(பொழிப்புரை) அறியாமையை நீக்கிவிடு.

Top of Form

Bottom of Form

 

 

84. பையலோ டிணங்கேல்.

 

(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடுஇணங்கேல் - கூடாதே.

(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

Top of Form

Bottom of Form

 

 

85. பொருடனைப் போற்றிவாழ்.

 

(பதவுரை) பொருள்தனை - திரவியத்தைபோற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்துவாழ் - வாழு.

(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு.

Top of Form

Bottom of Form

 

 

86. போர்த்தொழில் புரியேல்.

 

(பதவுரை) போர் - சண்டையாகியதொழில் - தொழிலை,புரியேல் - செய்யாதே.

(பொழிப்புரை) யாருடனும் கலகம் விளைக்காதே.

Top of Form

Bottom of Form

 

 

87. மனந்தடு மாறேல்.

 

(பதவுரை) மனம் - உள்ளம்தடுமாறேல் - கலங்காதே.

(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க மடையாதே.

Top of Form

Bottom of Form

 

 

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

 

(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்குஇடம் கொடேல் - இடங்கொடாதே.

(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே.

Top of Form

Bottom of Form

 

 

89. மிகைபடச் சொல்லேல்.

 

(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படிசொல்லேல் - பேசாதே.

(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

90. மீதூண் விரும்பேல்.

 

(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலைவிரும்பேல்-இச்சியாதே.

(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே.

Top of Form

Bottom of Form

 

 

91. முனைமுகத்து நில்லேல்.

 

(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலேநில்லேல் - (போய்) நில்லாதே.

(பொழிப்புரை) போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே.

Top of Form

Bottom of Form

 

 

92. மூர்க்கரோ டிணங்கேல்.

 

(பதவுரை) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனேஇணங்கேல் - சிநேகம் பண்ணாதே!

(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.

Top of Form

Bottom of Form

 

 

93. மெல்லினல்லாள் தோள்சேர்.1

 

(பதவுரை) மெல் - மெல்லியஇல் - (உன்) மனையாட்டியாகியநல்லாள் - பெண்ணுடையதோள் - தோள்களையேசேர் - பொருந்து.

(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.

1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம்.

Top of Form

Bottom of Form

 

 

94. மேன்மக்கள் சொற்கேள்.

 

(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடையசொல் - செல்லைகேள் - கேட்டு நட.

(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

Top of Form

Bottom of Form

 

 

95. மைவிழியார் மனையகல்.

 

(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசையருடையமனை - வீட்டைஅகல் - (ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.

(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.

Top of Form

Bottom of Form

 

 

96. மொழிவ தறமொழி.

 

(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளைஅற-(சந்தேகம்) நீங்கும்படிமொழி - சொல்லு.

(பொழிப்புரை)சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு.

Top of Form

Bottom of Form

 

 

97. மோகத்தை முனி.

 

(பதவுரை) மோகத்தை - ஆசையைமுனி - கோபித்து விலக்கு.

(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.

Top of Form

Bottom of Form

 

 

98. வல்லமை பேசேல்.

 

(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தைபேசேல் - (புகழ்ந்து) பேசாதே.

(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

99. வாதுமுற் கூறேல்.

 

(பதவுரை) வாது - வாதுகளைமுன் - (பெரியோர்) முன்னேகூறேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.

Top of Form

Bottom of Form

 

 

100. வித்தை விரும்பு.

 

(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையேவிரும்பு - இச்சி.

(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

Top of Form

Bottom of Form

 

 

101. வீடு பெறநில்.

 

(பதவுரை) வீடு - மோட்சத்தைபெற - அடையும்படிநில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்.

(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.

Top of Form

Bottom of Form

 

 

102. உத்தம னாயிரு.

 

(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகிஇரு-வாழ்ந்திரு.

(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.

Top of Form

Bottom of Form

 

 

103. ஊருடன் கூடிவாழ்.

 

(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனேகூடி - (நன்மை தீமைகளிலே) அளாவிவாழ் - வாழு.

(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.

Top of Form

Bottom of Form

 

 

104. வெட்டெனப் பேசேல்.

 

(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போலபேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.

(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.

Top of Form

Bottom of Form

 

 

105. வேண்டி வினைசெயேல்.

 

(பதவுரை) வேண்டி - விரும்பிவினை - தீவினையை,செயேல்-செய்யாதே.

(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.

Top of Form

Bottom of Form

 

 

106. வைகறைத் துயிலெழு.

 

(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலேதுயில்-நித்திரையை விட்டுஎழு - எழுந்திரு.

(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.

Top of Form

Bottom of Form

 

 

107. ஒன்னாரைத் தேறேல்.

 

(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களைதேறேல் - நம்பாதே.

(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.

'ஒன்னாரைச் சேரேல்' என்றும் பாடமுண்டு.

Top of Form

Bottom of Form

 

 

108. ஓரஞ் சொல்லேல்.

 

(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தைசொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.

(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

             ஆத்திசூடி மூலமும் உரையும்முற்றிற்று.

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி