"அமிலப் பேச்சு"

"அமிலப் பேச்சு" நான் கேள்விப்பட்டதில்லை. வஞ்சப்புகழ்ச்சி அணி (புகழ்வது போல் இகழ்தல் - தேவ ரனையர் கயவர்...) பள்ளியில் படித்தது நினைவிருக்கிறது. இரண்டுமே இலக்கியத்தரமான மொழிபெயர்ப்புகளென்று தோன்றுகிறது. “எள்ளல்” அல்லது “பகடி” கூட சிலர் உபயோகிப்பதைக் காண்கிறேன். பேச்சுத்தமிழில் "கிண்டல்" போதுமோ? அல்லது நக்கல்?

ஆங்கிலத்தில் sarcasm, irony, satire மூன்றும் நெருக்கமானவை. ஆனால் சற்று வித்தியாசமானவை. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கே இது சற்று உதைக்கும்.

பிச்சைக்காரனுக்கு ஐந்து பைசா போட்டவரிடம், "மகராசா, உங்கள மாதிரி வள்ளலப் பாத்ததே இல்ல" என்று பிச்சைக்காரன் சொன்னால், அது கிண்டல்/வஞ்சப்புகழ்ச்சி (sarcasm)

நகைச்சுவை, குதர்க்கம், அல்லது மிகைப்படுத்துதல் மூலம் ஒரு மனிதனைப் பற்றியோ கருத்தைப் பற்றியோ, கேலி அல்லது நையாண்டி செய்யும் உருவாக்கம் அல்லது படைப்பிற்கு satire என்பார்கள். Satire க்குத் தமிழில் “அங்கதம்” அல்லது “அங்கதப் படைப்பு” எனலாமென்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்தாளர் Dorothy Parker இதற்குப் பெயர் போனவர் என்று சொல்வார்கள். அவர் தனது கல்லறையில் இவ்வாறு எழுதி வைக்கச்சொன்னாராம் "இவள் எங்கு சென்றாலும், இங்கு உட்பட, சரியாக ஆலோசிக்காமல் சென்றவள்" அரசியல் கேலிச்சித்திரங்கள் எல்லாம் satire ஐச் சேர்ந்தவைதான். தமிழில் 'satire' ஐ ஏராளமாய் உபயோகித்தவர் சோ. அவரது 'முகமது பின் துக்ளக்' போன்ற நாடகங்களும் பல அரசியல் கட்டுரைகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

irony என்பதற்கு முரண் என்று சொல்லலாம். Satire, sarcasm போலல்லாமல், irony நிலைமை அல்லது நிகழ்வு சம்பந்தப்பட்டது. உதாரணங்கள்: நூறு வயது வாழ நூறு வழிகள் எழுதியவர் அரை நூறு வயதிலே அமரரானார். தீயணைப்பு நிலையம் தீக்கிரையானது. திருடன் வீட்டில் திருட்டு.

ஒரு அங்கதப் படைப்பில் (satire ), sarcasm (வஞ்சப்புகழ்ச்சி அணி), hyperbole (உயர்வு நவிற்சி அணி), irony (முரண்) போன்ற பல அணிகளும் (figures of speech) அடங்கியிருக்கலாம்.

irony க்குச் சரியான தமிழ் அணி எதுவென்று தேடியதில், இந்த விரோதவணிதான் பக்கத்தில் வருவதாகத் தோன்றுகிறது.

 

ஆண்டிப்பட்டியில் “கொரோனா குவாரண்டைன்” முகாமுக்கு போய் இரு நாட்கள் தங்கி வந்தால் நபருக்கு 2000 ரூபாய் கிடைக்குமாம் . தமிழக அரசு தோராயமாக பேரிடர் நிதி நபருக்கு  35,000 ரூபாய்- தேசிய  பேரிடர் நிதி தோராயமாக ஒன்றை லட்சம் ஒதுக்குது .

மீதி எல்லாம் “கமிசன் -கரப்சன் –கலக்சன் “irony hyperbole செய்வது Dorothy Parker இதற்குப் பெயர் போனவர் என்று சொல்வார்கள். அது யாரை என தெரிய வில்லை .

“கொள்ளை நோயிலும் கொள்ளை நடக்குது “-தேசிய  பேரிடர் நிதி/ மாநில பேரிடர் நிதி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் ?


Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி