நெருப்பாற்றில் நீந்தும் இயக்கம் திமுக என்பதற்கு திமுக கடந்து வந்த பாதை முழு விபரங்கள் காங்கிரஸை 1962 லேயே தோற்கடித்திருக்கலாம் என்பதே எதார்த்தமான உண்மை . 1900–1947 தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டியாரால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் , இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும் , ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும் , தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். 1. ஏ. சுப்பராயலு ( 17 டிசம்பர் , 1920-11 ஜூலை , 1921)- நீதிக்கட்ச...
மானங்காத்த மறவன்! * "குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள்அன்று என்று வாளின் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ, இவ் உலகத்தானே." (புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை) பொருள் விளக்கம் ஊன்தடி= சதைப்பிண்டம், ஆள்அன்று என்று வாளின் தப்பார்= ஆளல்ல என்று கருதாமல் வாளால் வெட்டிடத் தவறமாட்டார். ஞமலி=நாய். கேளல் கேளிர்=பகைவர். மதுகை= மனவலிமை மயிர் நீப்பின் வாழாத கவரிமான் போல் மானம் வரின் உயிர்நீப்பர் எனும் குறளுக்கு; தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று தமிழ்ச்சங்க காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று. தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல் தலைக்குமேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன்! தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும் தன் பட்டத்து ராணியையும் நெளியாமல் நிமிர்ந்து நின்றே நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான். நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்ப் பார்வை செலுத்தித்தான் நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான். படுத்த...
Comments
Post a Comment