Posts

Showing posts from September, 2020

தேவகானம்

Image
  நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமு ணுத்துச் சொல்லும் மந்த்ரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாத னுள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ~~தேவகானம் ~~ கனியும் நீ படைத்தனை கையும் நீ கொடுத்தனை கனியை நான் பறிக்கவும் கைய சைக்கச் செய்தனை கனியில் உள்ள சுவையும்நீ கனியை உண்ட மகிழ்வும்நீ கனியையா சுவைத்தனன்? கனியுனைச் சுவைத்தனன் தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ. ஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா? இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார். " சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது. சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது. அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடிய

குடும்ப விளக்கு

Image
  குடும்ப விளக்கு ஒருநாள் நிகழ்ச்சி அகவல் காலை மலர்ந்தது   இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை. இரவு போர்த்த இருள்நீங்க வில்லை ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல் , நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்து தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்தி டப்போகும் பொழுது , கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். ( 5 )   அவள் எழுந்தாள்   தூக்கத் தோடு தூங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும் , மங்கை எழுந்ததும் எழுந்தன இருகை வீசி ; தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்! ( 10 )   கோலமிட்டாள்   சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல் துளிஓளி விளக்கின் தூண்டு கோலைச் செங்காந் தள்நிகர் மங்கை விரலால் பெரிது செய்து விரிமலர்க் கையில் ஏந்தி , அன்னம் வாய்ந்த நடையொடு , முல்லை